
தமிழ் திரையுலக நடன இயக்குனர்கள் சங்க தேர்தல் (ஜூலை 14 ) இன்று நடைபெற்றது. இதில் நடன இயக்குனர்கள் சங்கத்தில் உள்ள உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டு தங்களுடைய வாக்குரிமையை நிறைவேற்றினர்.
அந்த வகையில் சென்னை, தி.நகரில் உள்ள சங்கத்தின் அலுவலகத்தில் ஓய்வுபெற்ற நீதிபதி பாலசுப்ரமணியம் முன்னிலையில் தேர்தல் நடந்தது.
தலைவர், செயலாளர், பொருளாளர் உள்ளிட்ட பதவிகளுக்கான தேர்தலில், தலைவர் பதவிக்கு நடன இயக்குனர்கள் ஷோபி மாஸ்டர் மற்றும் தினேஷ் மாஸ்டர் ஆகியோர் போட்டியிடுகின்றனர்.
இந்த தேர்தலில், உலக நாயகன் கமலஹாசன் கலந்து கொண்டு தன்னுடைய வாக்கை அளித்தார். இந்த தேர்தல் முடிவுகள் இன்று மாலை வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.