பாலாஜிக்குள் இப்படி ஒரு மனசும் இருக்கா..? திடீர் என மன்னிப்பு கேட்டு பிரமிக்க வைத்த வீடியோ..!

Published : Dec 18, 2020, 03:37 PM IST
பாலாஜிக்குள் இப்படி ஒரு மனசும் இருக்கா..? திடீர் என மன்னிப்பு கேட்டு பிரமிக்க வைத்த வீடியோ..!

சுருக்கம்

பிக்பாஸ் வீட்டில் அவ்வப்போது நடக்கும் பிரச்சனைகளுக்கு, போட்டியாளர்கள் உடனுக்குடன் மன்னிப்பு கேட்கா விட்டாலும், கமல் சுட்டி காட்டியதும், மன்னிப்பு கேட்பதை வழக்கமாக வைத்துள்ளனர். 

பிக்பாஸ் வீட்டில் அவ்வப்போது நடக்கும் பிரச்சனைகளுக்கு, போட்டியாளர்கள் உடனுக்குடன் மன்னிப்பு கேட்கா விட்டாலும், கமல் சுட்டி காட்டியதும், மன்னிப்பு கேட்பதை வழக்கமாக வைத்துள்ளனர். ஆனால் எதற்கெடுத்தாலும் சண்டைக்கு எகிறும் பாலா, முதல் முறையாக இரண்டு பேரிடம் மனதார, மன்னிப்பு கேட்பதாக கூறி இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார்.

இதுகுறித்த ப்ரோமோ தான் தற்போது வெளியாகியுள்ளது. இதில்... முக்கியமாக நான் இருவரிடம் மன்னிப்பு கேட்க வேண்டும். முதலில் சாரி கேட்க வேண்டிய நபர் ஆரி அண்ணன். இரண்டாவது ரியோ பிரதர். நீங்கள் எல்லாம் வாழ்க்கையில எவ்வளவோ பார்த்து விட்டு வந்திருப்பீர்கள் நான் இனிமேல் தான் பார்க்கணும்.

எனக்கு அந்த அளவிற்கு தகுதி இருக்கா என தெரியவில்லை. இங்கு இருக்கும் பலர் கீழே இருந்து தான் மேலே வந்திருக்கிறோம். இங்க இருக்குற ஒவ்வொருவரையும் கை பிடித்து தூக்கி விடணும் என்பதை தவிர்த்து கீழே இழுத்தது போல் தோன்றியது என கூறி மனதார மன்னிப்பு கேட்கிறார்.

பாலா இன்றைய தினம் அனைவர் மத்தியிலும் பேசிய போது, அவர் ஸ்டேட்டர்ஜி என்பதை பயன்படுத்தாமல் உண்மையிலேயே மனதில் இருந்து இந்த வார்த்தைகள் வந்ததையும் பார்க்க முடிந்தது. எனவே பாலாவிடம் இப்படி பட்ட ஒரு குணமும் உள்ளதை தெரிய வைத்துள்ளது இன்றைய பேச்சு.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

சந்தானம் என் சகோதரன் : மறைந்த டாக்டர் சேதுராமனின் மனைவி உருக்கம்: கண்கலங்க வைக்கும் பின்னணி!
நண்பன் வெங்கடேஷுக்காகக் கொள்கையை மாற்றிய பாலகிருஷ்ணா: விஸ்வரூபமெடுக்கும் 'வாவ்' கூட்டணி!