
இயக்குநர் பாலாவின் வளர்ப்புகள்தான் இயக்குநர்கள் அமீர் மற்றும் சசிக்குமார். இதில் சசி, பாலாவின் மிகவும் கீழ்ப்படிதலான சிஷ்யன். தேறவே தேறாது! என்று தெரிந்தும் பாலாவுக்காக ‘தாரை தப்பட்டை’யில் பல்லைக் கடித்துக் கொண்டு நடித்துக் கொடுத்தார் சசி.
இந்நிலையில் அவரது குரு விசுவாசத்தை அநியாயத்துக்கு அசைத்துப் பார்த்திருக்கிறது ‘அசோக்குமாரின் தற்கொலை’.
பாலாவின் நெருக்கமான நண்பர்தான் சினிமா ஃபைனான்ஸியர் அன்பு என்பது ஊரறிந்த சேதி. இந்நிலையில் அசோக்குமார் மரணத்தை ஒட்டி அன்பு மீது புகார் கொடுக்க சசி, அமீர் ஆகியோர் தயாரான நேரத்தில் அவர் மீது புகார் கொடுக்க வேண்டாம்! தீர விசாரித்துவிட்டு பார்த்துக் கொள்ளலாம்! என்று தடுத்தாராம் பாலா.
எவ்வளவோ சொல்லியும் பாலா கேட்காததால் ஒரு கட்டத்தில் செம டென்ஷனான அமீர் “அன்புவுக்கு கோடி கோடியா சசி வட்டி கட்டிட்டு இருந்தான். அப்போவெல்லாம் பேசாம இருந்தீங்க. ஆனா இப்போ எழவு வீட்டுல வந்து பஞ்சாயத்து பண்றீங்களே! இது என்ன நியாயம்?” என்று கேட்டிருக்கிறார். சசியும் மெளனமாக அதை ஆமோதித்திருக்கிறார்.
தன் சிஷ்யனுர்கள் இப்படி தனக்கெதிராக திரும்புவதை எதிர்பார்க்காத பாலா கோபமாக அங்கிருந்து கிளம்பிவிட்டாராம்.
அதன் பிறகே புகார் கொடுக்க போயிருக்கின்றனர் அமீர், சசி உள்ளிட்டோர்.
ஆனால் இப்போது வரை பாலா தன் பிடியிலிருந்து இறங்கி வராமல் அமீர் மற்றும் சசி மீது டென்ஷனிலேயே இருக்கிறாராம். இதற்காக பேசிய நண்பர்களிடம் “ஏண்டா பணத்தை திருப்பி கொடுக்க முடியலேன்னா என்ன...க்கு கடன் வாங்குறானுங்க? டாக்குமெண்டு எதுவுமில்லாம சினிமாக்காரனுக்கு கோடிகளை அள்ளிக் கொடுக்க அன்புவ விட்டா எவன் இருக்கான்? இப்படி நாலு பேரு அவனை ஏமாத்தினாக்க அவன் எப்படிய்யா தொழில் பண்ணுவாம்?” என்று கொதித்திருக்கிறார்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.