
இளையதளபதி விஜய் நடித்து முடித்துள்ள 'பைரவா' திரைப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்து தற்போது இரவுபகலாக போஸ்ட் புரடொக்ஷன்ஸ் பணிகள் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் கடந்த சில வருடங்களாக விஜய் தான் நடிக்கும் ஒவ்வொரு படங்களிலும் ஒரு பாடலை பாடி வருவதை வழக்கமாக கொண்டுள்ளார்.
அந்த வரிசையில் 'பைரவா' படத்திலும் ஒரு பாடலை விஜய் பாடியுள்ளதாக செய்திகள் வெளிவந்தது.
இந்நிலையில் இந்த பாடல் குறித்து முதன்முறையாக இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் தனது சமூக வலைத்தளத்தில் தெரிவித்துள்ளார்.
விஜய் இந்த படத்தின் பாடலை நம்ப முடியாத வகையில் மிகவும் அபாரமாக பாடியுள்ளார்என்றும . இந்த பாடலுக்கு பூமியே அதிரும் வகையிலான டான்ஸ் உறுதி'என்று பதிவு செய்துள்ளார்.
சந்தோஷ் நாராயணனின் இந்த பதிவை அடுத்து ரசிகர்களிடம் இந்த படத்திற்கு ஏற்பட்டுள்ள எதிர்பார்ப்பு இன்னும் பலமடங்கு உயர்ந்துள்ளதாக கூறப்படுகிறது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.