நடிகர் சங்க பொதுக்குழு நடக்குமா? மீண்டும் ஒரு சிக்கல் - நாட்டு மக்களுக்கு ஒரு நீதி நடிகர்களுக்கு ஒரு நீதியா??

 
Published : Nov 26, 2016, 06:18 PM ISTUpdated : Sep 19, 2018, 02:11 AM IST
நடிகர் சங்க பொதுக்குழு நடக்குமா? மீண்டும் ஒரு சிக்கல் - நாட்டு மக்களுக்கு ஒரு நீதி நடிகர்களுக்கு ஒரு நீதியா??

சுருக்கம்

நடிகர் சங்கம் கூட்டும் பொதுக்குழுவுக்கு சிக்கலோ சிக்கல் எழுந்துள்ளது. இதில் புதிய சிக்கலாக சட்டப்படி பொதுக்குழுவுக்கு அனுமதி அளிக்க கூடாது என புது புகார் அளித்துள்ளனர்.

நடிகர் சங்க பொதுக்குழு அறிவிக்கப்பட்டதிலிருந்தே பரபரப்பு தொற்றி கொண்டது. பரபரப்பாக நடந்த நடிகர் சங்க தேர்தலில் விஷால் நாசர் தலைமையிலான புதிய அணி பொறுப்பேற்ற பிறகு நடி பெறும் முதல் பொதுக்குழு கூட்டம்.

4000க்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் கூடும் இந்த பொதுக்குழுவில் அடுத்த கட்ட நடவடிக்கைகள் , நடிகர் சங்கம் மேல் வராகி எனபவர் சுமத்தியுள்ள குற்றச்சாட்டுகள் , நடிகர் சங்க கட்டிடம் கட்டுவதில் திட்டமிட்டபடி செயல்படாதது. எம்ஜிஆர் நூற்றாண்டு விழா உள்ளிட்ட பிரச்சனைகள் உள்ளன. 

நடிகர் சங்க தேர்தலில் ஆரம்பத்தில் விஷால் அணியுடன் இருந்த ரித்தீஷ் , வடிவேல் போன்றோர் இப்போது அதிருப்தியில் உள்ளனர். இதன் எதிரொலியும் இந்த பொதுக்குழ்வில் எதிரொலிக்கும். அதே போல் முன்னாள் நிர்வாகிகள் ராதாரவி, சரத்குமார் போன்றோரை சஸ்பெண்ட் செய்ததால் அவர்கள் தங்களை பங்கேற்க அனுமதிக்க கோரி வழக்கு தொடர்ந்தனர். அது நிலுவையில் உள்ளது. 

இதற்கு அடுத்து பொதுக்குழு நடத்த உத்தேசித்துள்ள லயோலா கல்லூரி பற்றிய சர்ச்சையும் எழுந்தது. சுஜித்தா எனபவர் கல்விக்கூடங்கள் அதற்காக அளிக்கப்பட்ட சலுகைகளை இது போன்ற நிகழ்ச்சிகள் மூலம் துஷ்பிரயோகம் செய்யப்படுவதாக குற்றம் சாட்டி தடை விதிக்க கேட்டு வழக்கு தொடர்ந்தனர். 

இந்நிலையில் லயோலா கல்லூரியும் , போலீசாரும் பொதுக்குழு நடத்த அனுமதி அளிக்க மறுத்து விட்டனர். இதையடுத்து இன்று கமிஷனர் அலுவலகம் வந்த விஷால் , நாசர் , கார்த்தி ஆகியோர் போலீஸ் அதிகாரிகளை சந்தித்து லயோலா கல்லூரியில் பொதுக்குழு நடத்த அனுமதி கேட்டனர். 
ஆனால் போலீசார் அனுமதி மறுத்துவிட்டனர். இதையடுத்து நடிகர் சங்க வளாகத்தில் நிகழ்ச்சியை நடத்த அனுமதி கேட்டனர். அதற்கு போலீசார் அனுமதி அளித்தனர். இதையடுத்து நடிகர் சங்க அலுவலகத்தில் பொதுக்குழு நடக்க ஏற்பாடுகள் நடந்து வருகிறது. இதை எதிர்த்து மக்கள் செய்தி மையம் அமைப்பின் சார்பில் அனபழகன் காவல் துறையில் புகார் ஒன்றை அனுப்பி உள்ளார். 

அதில் நடிகர் சங்க பொதுக்குழு கூட்டம் நடிகர் சங்க வளாகத்தில் நடத்த அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது. நாளை பொதுக்குழு கூட்டம் நடத்த சில மணி நேரங்களுக்கு முன்னர் அனுமதி கேட்டு கடிதம் கொடுக்கப்பட்டுள்ளது. நடிகர் சங்கத்தின் உறுப்பினர் விஷ்ணு வர்தன் தந்தை தீயணைப்புத்துறை கூடுதல் டிஜிபி என்பதால் சாமியானா அமைக்கும் பணிகள் வேகமாக நடந்து வருகிறது.

சென்னை மாநகர காவல்துறை விதிகளின் படி அனுமதி கடிதம் 7 நாட்களுக்கு முன்பு கொடுக்கப்படவேண்டும். மேலும் சென்னை மாநகர காவல்துறை விதி 44 செயல்பாட்டில் இருப்பதால் அனுமதி இன்றி 4 பேர் கூடக்கூடாது. பொதுக்குழு நடக்கும் போது ஆயிரக்கணக்கில் கூடுவார்கள்.
கலவரம் மற்றும் அசாதாரண சூழ்நிலை ஏற்பட வாய்ப்புண்டு ,நாளை நடக்கும் பொதுக்குழுவுக்கு இன்று அனுமதி கேட்டு கடிதம் கொடுப்பது விதிகளுக்கு முரணானது ஆகவே பொதுக்குழு கூட்டம் நடத்த அனுமதி அளிக்க கூடாது இவ்வாறு அந்த புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் நாளை பொதுக்குழு நடக்குமா? போலீஸ் அனுமதி கிடைக்குமா? என்ற  சந்தேகம் இப்போது எழுந்துள்ளது.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

நானும், ரேவதியும் 6 மாசம் சேர்ந்து இருக்கணும்: கோர்ட் உத்தரவு! சாமுண்டீஸ்வரி, சந்திரகலாவுக்கு ஆப்பு வச்ச கார்த்திக்!
ஜெயிலர் 2-ல் நான் கெஸ்ட் ரோல் இல்லை: சிவண்ணாவின் மர்மப் பேச்சு! முத்துவேல் பாண்டியனுடன் மீண்டும் நரசிம்மா!