லயோலா கல்லூரி அனுமதி மறுப்புக்கு ராதாரவி , சரத்குமார் காரணமா? - விஷால் பேட்டி

First Published Nov 26, 2016, 5:30 PM IST
Highlights


நடிகர் சங்க பொதுக்குழுவை லயோலா கல்லூரியில் நடத்த போலீஸ் அனுமதி மறுத்ததால் நடிகர் சங்க கட்டிடத்தில் விழாவை நடத்த உள்ளதாக விஷால் தெரிவித்துள்ளார். லயோலா கல்லூரிக்கு மிரட்டல் விடுக்கப்பட்டதன் பின்னனியில் ராதாரவி , சரத்குமார் உள்ளார்களா என்ற கேள்விக்கு விஷால் கோபமாக புறப்பட்டு சென்றார்.

நடிகர் சங்க பொதுக்குழு கூட்டத்தை லயோலா கல்லூரியி நடத்த திட்டமிட்டிருந்தனர். ஆனால் கல்லூரி கல்விக்கூடம் அங்கு நடத்தப்படும் நிகழ்ச்சிகள் கல்விக்கு சம்பந்தமில்லாதவைகளாக உள்ளன. கல்விகூடங்களுக்காக மானிய விலையில் வழங்கப்படும் மின்சாரம் தவறாக இது போன்ற விழாக்களுக்காக பயன்படுத்தப்படுகிறது என்பதால் நிகழ்ச்சிக்கு அனுமதி அளிக்க கூடாது என சுஜித்தா எனபவர் வழக்கு தொடர்ந்திருந்தார். 

இந்த விவகாரம் பரபரப்பாக பேசப்பட்டது. இந்நிலையில் பொதுமக்கள் மத்தியில் இந்த விவகாரம் பரபரப்பாக பேசப்பட்டது. இந்நிலையில் பல்வேறு எதிர்ப்புகளை கணக்கில் கொண்டு சென்னை போலீசார் லயோலா கல்லூரியில் அளித்த அனுமதியை ரத்து செய்தனர். லயோலா கல்லூரியும் அனுமதி மறுத்துவிட்டது.

இன்று மதியம்  சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்துக்கு வந்த நடிகர் விஷால் , நாசர் , கார்த்தி ஆகியோர் கமிஷனர் அலுவலக அதிகாரிகளை சந்தித்தனர். தாங்கள் லயோலாவில் பேசி அனும்தி வாங்கிக்கொள்வதாகவும் போலீஸ் அனுமதி அளிக்க வேண்டும் எனவும் கேட்டு கொண்டனர்.

ஆனால் போலீசார் அனுமதி தர மறுத்து விட்டனர். பின்னர் வேறு வழியில்லாமல் நடிகர் சங்க வளாகத்தில் நடத்த ஒத்துகொண்டு வந்தனர். வெளியில் செய்தியாளர்களை சந்தித்த விஷால் கூறியதாவது. நாளை நடைபெற உள்ள பொதுக்குழுவுக்கு லயோலா அனுமதி மறுத்துள்ளது. யாரோ போன் செய்து மிரட்டியுள்ளதாக கூறியுள்ளனர். அதனால் இந்த விஷயங்களை அலசிப்பார்த்து நடிகர் சங்க வளாகத்தில் நடத்த உள்ளோம் 
வெடிகுண்டு மிரட்டல் தான் காரணமா? 

விஷால் :அதுதான்  உண்மை நிலை என்று நினைக்கிறேன். 
வெடிகுண்டு மிரட்டல் பின்னனியில் முன்னாள் நிர்வாகிகளுக்கு தொடர்பு இருக்கிறது என்று நினைக்கிறீர்களா? 
விஷால்: அதை அவர்களிடமே போய் கேளுங்கள் என்று கோபமாக சொல்லிவிட்டு சென்றார்.

click me!