
நடிகர் சங்க பொது குழு கூட்டம் நாளை லயோலா கல்லூரி வளாகத்தில் நடைபெறுவதாக இருந்தது.
ஆனால் கல்லூரி வளாகத்தில் எப்படி சினிமா சம்பந்தபட்ட நிகழ்ச்சிகளை நடத்துவீர்கள் என ஒருவர் வழக்கு தொடர்ந்ததை அடுத்து இன்று பத்திரிகையாளர்கள் சந்திப்பு நடைபெற்றது.
இதில் நடிகர் சங்க தலைவர் நாசர், செயலாளர் விஷால், மற்றும் பொருளாளர் கார்த்தி கலந்து கொண்டனர்.
இதில் விஷால் பேசுகையில் நாளை நடைபெறுவதாக இருந்த பொது குழு கூட்டம் கண்டிப்பாக போலீசாரின் பலத்த பாதுகாப்போடு நடைபெறும் என்றார்.
ஆனால் லயோலா கல்லூரியில் நடைபெறாது என்றும், அதற்கு பதில் தி.நகரில் உள்ள நடிகர் சங்க வளாகத்தில் நடை பெரும் என்றார்.
மேலும் ஏன் இடம் மாற்றப்பட்டது என்று பத்திரிகையாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதில் அளித்த விஷால் சிலர் லயோலா கல்லூரியை தொடர்பு கொண்டு மிரட்டியதாக தெரிவித்தார்.
ஆனால் தங்களுக்கு தங்களுடைய நடிகர் சங்க இடத்தில் நடத்த வேண்டும் என ஆசை இருந்ததால் தற்போது இந்த முடிவு எடுக்க பட்டுள்ளதாக தெரிவித்தவர்.
மேலும் இதேபோல் எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா மற்றும் திமிழ் சினிமா நூற்றாண்டு விழாவும் நடைபெற உள்ளதாகவும் இதில் பல பழம்பெரும் கலைஞர்கள் கலந்து கொள்வார்கள் என்றும் இதில் அவர்களுக்கு விருது வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார் விஷால்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.