அனல் பறக்கும் பைரவ பட டீசர் விமர்சனம்......!!!

 
Published : Oct 29, 2016, 05:05 AM ISTUpdated : Sep 19, 2018, 12:51 AM IST
அனல் பறக்கும் பைரவ பட டீசர் விமர்சனம்......!!!

சுருக்கம்

இளையதளபதி விஜய் நடித்துள்ள 'பைரவா' திரைப்படத்தின் டீசர் ரசிகர்களுக்கு தீபாவளி விருந்தாக வெளியாகி விஜய் ரசிகர்களை மட்டுமின்றி அனைத்து தரப்பினர்களையும் திருப்தி செய்துள்ளது.
 
ஒரு நிமிடம் 4 வினாடிகள் உள்ள இந்த டீசரின் முதல் ஷாட்டிலேயே இதுவொரு பக்கா ஆக்சன் எண்டர்டெயின்மெண்ட் படம் என்பதை நிரூபித்துவிட்டது இயக்குனர் . 
 
மேலும் வழக்கம்போல அழகான புன்னகையுடன் அறிமுகமாகும் விஜய், பேசும் ஒவ்வொரு வசனமும் பஞ்ச் வசனத்திற்கு இணணயாக உள்ளது. 

 'தெரிஞ்ச எதிரியை விட தெரியாத எதிரிக்குத்தான் அள்ளு'..... அதிகமா இருக்கணும்', இங்க நிறைய பேருக்கிட்ட இல்லாத கெட்ட பழக்கம் ஒண்ணு என்கிட்ட இருக்குது' ஆகிய வசனங்கள் இதற்கு உதாரணமாக சொல்லலாம்.
 
நான்கைந்து ஷாட்களில் வந்தாலும் கீர்த்திசுரேஷின் அழகு மற்றும் துள்ளல், ஒரே ஒரு காட்சிகளில் வரும் வில்லன்கள் ஜெகபதிபாபு, மைம்கோபியின் மிரட்டல், சதீஷின் அதிரடி குத்தாட்டம் ஆகியவை டீசரின் பிற சிறப்பு அம்சங்கள் ஆகும்.
 
'நெருப்புடா' புகழ் சந்தோஷ் நாராயணன் இசையில் அருண்காமராஜ் குரலில் 'யார்ரா யார்ரா இவன் ஊரைக்கேட்டா தெரியும், முன்னால நீ நின்னு பார்ரா புரியும், என்ற பாடலில் திரையில் தோன்றும்போது கைதட்டல் விண்ணை பிளக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.

சந்தோஷ் நாராயணனின் மற்றொரு சிறந்த பின்னணி இசை அமைந்த படமாக இது இருக்கும் என்பதில் துளியும் சந்தேகம் இல்லை.
 
மொத்தத்தில் விஜய் ரசிகர்களுக்கு மட்டுமின்றி அனனத்து தரப்பினர்களையும் கவர்ந்த இந்த டீசர் நிச்சயம் பார்வையாளர்கள் எண்ணிக்கையில் சாதனை படைக்க அதிக வாய்ப்பு இருப்பதாகவே கருதப்படுகிறது.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

அப்பாவின் வாழ்க்கை வரலாற்று படத்தில் நடிக்க ஆசை இவ்வளவு மக்கள் Support பண்றாங்க.. சண்முக பாண்டியன்
ஒருத்தர விடல; வீடு புகுந்து எல்லோரையும் தூக்கிய போலீஸ்: பாக்கியத்தின் ரிவெஞ்ச் ஸ்டார்ட்! பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 அதிரடி புரோமோ!