பாகுபலி இரண்டாம் பாகத்தின்  ட்ரைலர் வெளியீடு எப்போது...படக்குழு அறிவிப்பு...

 
Published : Mar 11, 2017, 05:03 PM ISTUpdated : Sep 19, 2018, 02:10 AM IST
பாகுபலி இரண்டாம் பாகத்தின்  ட்ரைலர் வெளியீடு எப்போது...படக்குழு அறிவிப்பு...

சுருக்கம்

bahubali triler release date conformed

இயக்குனர் ராஜமௌலி இயக்கிய பாகுபலி திரைப்படத்தின் முதல் பாகத்திற்கு இருந்த எதிர்பார்ப்பை  விட இரண்டாம் பாகத்திற்கான எதிர்பார்ப்பு மிக அதிகமாகவே உள்ளது.

இந்தியாவின் மிகப்பெரிய பட்ஜெட்டில் தயாராகி வரும் 'பாகுபலி 2' படத்திற்கு இந்தியாவில் மட்டுமின்றி உலகம் முழுவதிலும் மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. 

மேலும் இந்த திரைப்படத்தின் சிறப்பு காட்சியை  இங்கிலாந்து ராணி எலிசபெத், பிரதமர் மோடி போன்ற விவிஐபிகளுக்கு திரையிடும் அளவுக்கு இந்த படம் முக்கியத்துவம் பெற்றுள்ளது.
 
கட்டப்பா ஏன் 'பாகுபலி'யை  கொன்றார்...? அதற்கு  என்ன காரணம் என்று தெரிந்து கொள்ள அணைத்து ரசிகர்களும்  இந்த படத்தை பார்ப்பார்கள் என்பதால் இந்த படத்தின் வசூல் மிகப்பெரிய சாதனையை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது
 
இந்நிலையில் இந்த படத்தின் ட்ரைலர் ரிலீஸ் தேதி மற்றும் நேரம் குறித்த அறிவிப்பை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். 

இந்த படத்தின் டிரைலர் இம்மாதம் 16ஆம் தேதி காலை 9 மணிக்கு வெளியாகவுள்ளது. இந்த டிரைலர் திரையங்குகள் மற்றும் யூடியூப் இணையதளம் ஆகியவற்றில் ஒரே நேரத்தில் ரிலீஸ் ஆகும் என்று அறிவித்துள்ளனர்.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

'ரவுடி ஜனார்தனா' கிளிம்ப்ஸ்: குறி தப்பாது! மிரட்டலான கேங்ஸ்டர் அவதாரத்தில் விஜய் தேவரகொண்டா!
செந்தில் பேச்சை கேட்காத பாண்டியன்: இருந்தாலும் இம்புட்டு வைராக்கியம் ஆகாது: குடும்பத்தில் வெடிக்கும் அடுத்த சண்டை!