'சூர்யா 40 ' படத்தில் இணைந்த பாகுபலி நடிகர்..! உறுதி செய்த சன் பிச்சர்ஸ்..!

By manimegalai aFirst Published Jan 29, 2021, 3:08 PM IST
Highlights

நடிகர் சூர்யா, இயக்குனர் பாண்டிராஜ் இயக்கத்தில் நடிக்க உள்ள 40 ஆவது படம் குறித்து அடுத்தடுத்த தகவல்கள் வெளியாகி வரும் நிலையில், தற்போது இந்த படத்தில் 'பாகுபலி' பட நடிகர் கமிட் ஆகியுள்ளதாக அதிகார பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
 

நடிகர் சூர்யா, இயக்குனர் பாண்டிராஜ் இயக்கத்தில் நடிக்க உள்ள 40 ஆவது படம் குறித்து அடுத்தடுத்த தகவல்கள் வெளியாகி வரும் நிலையில், தற்போது இந்த படத்தில் 'பாகுபலி' பட நடிகர் கமிட் ஆகியுள்ளதாக அதிகார பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

சன்பிக்சர்ஸ் நிறுவனம், தற்போது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வரும் 'அண்ணாத்த', மற்றும் நடிகர் விஜய் இயக்குனர் நெல்சன் திலிப் குமார் இயக்கத்தில் நடிக்க உள்ள 'தளபதி 65 ' ஆகிய பிரமாண்ட படங்களை தயாரித்து வருகிறது. இதை தொடர்ந்து, நடிகர் சூர்யா இயக்குனர் பாண்டிராஜ் இயக்கத்தில் நடிக்க உள்ள 40 ஆவது படத்தையும் தயாரிக்கிறது.

இதுகுறித்து ஏற்கனவே அதிகார பூர்வ அறிவிப்பு வெளியான நிலையில், இந்த படத்தில் நடிக்க உள்ள நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் குறித்து அவ்வப்போது தகவல்கள் வெளியாகி வருகிறது. சமீபத்தில் இந்த படத்திற்கு இசையமைக்க உள்ள இசையமைப்பாளர் குறித்த தகவலை, சன் பிச்சர்ஸ் நிறுவனம் அதிகார பூர்வமாக வெளியிட்டது. 

இதை தொடர்ந்து இந்த படத்தில் நாயகியாக நடித்துள்ள பிரியங்கா அருள் மோகன் கமிட் செய்யப்பட்டுள்ளதாக வீடியோ வெளியிட்டு அறிவித்தனர். தற்போது 'சூர்யா 40 ' படத்தில் 'பாகுபலி' படத்தின் கட்டப்பா, முக்கிய வேடத்தில் நடிக்க உள்ளதாக அதிகார பூர்வ தகவல் வெளியாகியுள்ளது.

ஏற்கனவே சூர்யாவின் சகோதரர் கார்த்தியை வைத்து இயக்குனர் பாண்டிராஜ் இயக்கிய 'கடைக்குட்டி சிங்கம்' படத்தில் சத்யராஜ் நடித்திருந்த நிலையில், சூர்யாவின் 40 ஆவது படத்திலும் நடிக்க கமிட் ஆகியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

The immensely dynamic actor joins the cast of pic.twitter.com/p4rW9ldmN1

— Sun Pictures (@sunpictures)

click me!