கூத்தாடி என்று நீங்கள் சொல்வதால் நாங்கள் சிறுமைப்படுவதில்லை..! நெட்டிசனுக்கு விவேக் நச் பதிலடி..!

By manimegalai aFirst Published Jan 29, 2021, 1:55 PM IST
Highlights

நடிகர்களை, கூத்தாடி என்று விமர்சனம் செய்த நெட்டிசன் ஒருவருக்கு, நடிகர் விவேக் நச் என பதிலடி கொடுத்துள்ள பதிவுக்கு பலர் ஆதரவு தெரிவித்து வருகிறார்கள்.
 

நடிகர்களை, கூத்தாடி என்று விமர்சனம் செய்த நெட்டிசன் ஒருவருக்கு, நடிகர் விவேக் நச் என பதிலடி கொடுத்துள்ள பதிவுக்கு பலர் ஆதரவு தெரிவித்து வருகிறார்கள்.

காமெடியில் கூட நல்ல விஷயங்களை புகுத்தி, ரசிகர்களை சிரிக்க வைக்கும் ஒப்பற்ற காமெடி நடிகர் விவேக். நடிப்பை தாண்டி, சமூக சேவைகளையும் செய்து வருகிறார். சோசியல் மீடியாவில் மிகவும் ஆக்ட்டிவாக இருக்கும் விவேக்... அவ்வப்போது,  ஆக்கபூர்வமான கருத்துக்களை ட்விட்டர் பக்கத்தில் பதிவிடுவதை வழக்கமாக வைத்துள்ளார்.

அந்த வகையில் மாணவர்களுக்காக விவேகானந்தர் கூறிய ஒரு கருத்தை ட்விட்டர் பக்கத்தில் பதிவு செய்திருந்தார்.  இதற்கு  நெட்டிசன் ஒருவர் விவேகானந்தர் கூறியது எல்லாம் படிக்க மாட்டார்கள் நம் மாணவர்கள் என்றும், அஜித்-விஜய் என்றால் மட்டுமே படிப்பார்கள் என்று கூறினார். 

இந்த பதிவுக்கு கமெண்ட் செய்த  ஒருவர், ‘ஆமாம் கூத்தாடிகள் மக்களை இப்படி ஆக்கி வைத்திருக்கிறார்கள், என்ன விவேக்? என்று கேள்வி எழுப்பியிருந்தார்.

 

மாணவர்களுக்காக இவ்வாறு கூறுகிறார் விவேகானந்தர் !! pic.twitter.com/oEQu8bUWr4

— Vivekh actor (@Actor_Vivek)

இதற்க்கு பதிலடி கொடுக்கும் விதத்தில், நடிகர் விவேக்... கூத்தாடின்னு சொல்லீட்டு ஏன் சார் எங்க குடும்ப கூத்தாடிய profile dpயா வச்சிருக்கீங்க? கலைஞர்களை கூத்தாடி என்று நீங்கள் சொல்வதால் நாங்கள் சிறுமைப்படுவதில்லை. பெருமைதான்! அந்த சிவனே மன்றில் ஆடுவது கூத்து தானே! என்று கூறியுள்ளார். நடிகர் விவேக்கின் இந்த டுவீட் ரசிகர்கள் பலர் தங்களது ஆதரவை தெரிவித்து வருகிறார்கள்.
 

கூத்தாடின்னு சொல்லீட்டு ஏன் சார் எங்க குடும்ப கூத்தாடிய profile dp யா வச்சிருக்கீங்க?😂 கலைஞர்களை கூத்தாடி என்று நீங்கள் சொல்வதால் நாங்கள் சிறுமைப்படுவதில்லை. பெருமைதான்! அந்த சிவனே மன்றில் ஆடுவது கூத்து தானே!!🙏🏼🙏🏼🙏🏼🙏🏼 https://t.co/B0R1qg4WOY

— Vivekh actor (@Actor_Vivek)

click me!