
ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் அதிரடி பேட்ஸ்மேனாக வலம் வருபவர் டேவிட் வார்னர். கொரோனா லாக்டவுன் காலத்தில் பிரபல இந்தி பாடல்களுக்கு மகள்கள் மற்றும் மனைவியுடன் சேர்ந்து நடனமாடிய வீடியோக்கள் இணையத்தில் தாறுமாறு வைரலானது. ஐபிஎல் போட்டியின் போது ஐதராபாத் அணிக்கு கேப்டனாக விளையாடி வார்னர் புட்ட பொம்மா பாடலுக்கு நடனமாடியும், பாகுபலி பட வசனங்களை பேசியும் வெளியிட்ட வீடியோக்கள் ரசிகர்களை கவர்ந்தது.
இதையும் படிங்க: ஜெயலலிதா சிலை திறப்பிற்கு உதவிய அஜித் ஐடியா... கொண்டாட்டத்தில் தல ரசிகர்கள்...!
இந்தி, தெலுங்கு ஹீரோக்களின் முகத்திற்கு பதிலாக ஃபேஸ் ஆப் மூலமாக தன்னுடைய முகத்தை வைத்து வார்னர் வெளியிடும் வீடியோக்கள் சோசியல் மீடியாவில் வைரலாவது வழக்கம். தற்போது தமிழ் சினிமாவின் டாப் ஸ்டாரான சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தாகவே வார்னர் மாறிய வீடியோ சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.
இதையும் படிங்க: இறுக்கி அணைத்த படி இரண்டாவது காதலருடன் ஸ்ருதி ஹாசன்... பிறந்தநாளில் ரசிகர்களுக்கு கொடுத்த ஷாக் சர்ப்ரைஸ்...!
இதற்கு முன்னதாக எந்திரன் படத்தின் துப்பாக்கி சூடும் காட்சியில் ரஜினியின் முகத்திற்கு பதிலாக தன்னுடைய முகத்தை வைத்து வார்னர் வெளியிட்ட வீடியோ வைரலான நிலையில், தற்போது தர்பார் பட மாஸ் காட்சிகளை வைத்து வார்னர் வெளியிட்டுள்ள வீடியோ வைரலாகி வருகிறது. அதை பார்க்கும் ரசிகர்கள் வார்னர் அப்படியே அச்சு அசலாக ரஜினி போலவே இருப்பதாக புகழ்ந்து வருகின்றனர்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.