
Badava Gopi Apologizes Apology on Vijay TV Dog Debate! நாடு முழுவதும் தெரு நாய்களின் தொல்லை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. தமிழ்நாட்டில் சென்னை முதல் கன்னியாகுமரி வரை தெரு நாய்களால் ஏராளமான மக்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். குழந்தைகள், பெண்களை தெரு நாய்கள் விரட்டி விரட்டிக் கடிக்கின்றன. பொதுமக்களை கடித்துக் குதறும் தெரு நாய்களால் சாலை விபத்துகளுக்கும் முக்கிய காரணமாக விளங்கி வருகின்றன. நாய்களின் அட்டூழியத்தால் மக்களால் நிம்மதியாக சாலையில் நடமாட முடியவில்லை.
நீயா? நானா? நிகழ்ச்சியில் நாய்கள் குறித்த விவாதம்
ஆகையால் தெரு நாய்களை அப்புறப்படுத்த வேண்டும் என நாடு முழுவதும் கோரிக்கைகள் எழுந்தன. இதற்கு நாய் பிரியர்கள், விலங்குகள் நல ஆர்வலர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். நாய்களை அப்புறப்படுத்த அனுமதிக்க மாட்டோம் என அவர்கள் பொங்கியெழுந்து வருகின்றனர். நாய்கள் விவகாரம் நாடு முழுவதும் விஸ்வரூபமெடுத்த நிலையில், விஜய் டிவியில் புகழ்பெற்ற கோபிநாத்தின் நீயா? நானா? நிகழ்ச்சியில் இந்த வாரம் தெரு நாய்கள் பிரச்சனை குறித்து விவாதிக்கப்பட்டது.
படவா கோபியின் சர்ச்சை பேச்சு
இந்த விவாத நிகழ்ச்சியில் ஒருபக்கம் தெரு நாய்களால் பாதிக்கப்பட்டவர்கள் தங்கள் குழந்தைகள், தாங்கள் தெரு நாய்களால் பாதிக்கப்பட்டதை வேதனையுடன் தெரிவித்தனர். மறுபக்கம் நாய் பிரியர்கள் என்ற அழைக்கப்படுபவர்கள் தெரு நாய்களுக்கு ஆதரவாக பேசினார்கள். இந்த நிகழ்ச்சியின் கடைசிப் பகுதியில் பங்கேற்ற நடிகர் படவா கோபி, ''பொதுவாக ஒரு இடத்தில் பழக்கமானவர்களை நாய்கள் கடிக்காது. இரவு 9 மணிக்கு மேல் புதிதாக ஒருவர் வந்தால் தான் நாய்கள் குறைக்கும். இரவு 11 மணிக்கு மேல் நீங்கள் ஏன் வெளியே இதுபோன்ற இடங்களுக்கு செல்கிறீர்கள். அப்படி சென்றாலும் பாதுகாப்பாக செல்லுங்கள்'' என்றார்.
மன்னிப்பு கேட்ட படவா கோபி
படவா கோபியின் பேச்சுக்கு கடும் எதிர்ப்பு எழுந்தது. இரவில் வெளியில் நடமாடக்கூடாது என்று சொல்வதற்கு இவர் யார்? என்று பலரும் சமூகவலைத்தளத்தில் கண்டனம் தெரிவித்தனர். இந்நிலையில், தனது பேச்சுக்கு படவா கோபி மன்னிப்பு கேட்டுள்ளார். இது தொடர்பாக வீடியோ வெளியிட்ட அவர், ''பாதிக்கப்பட்டவர்களை நிகழ்ச்சி பண்ணுவது எந்த விதத்தில் நியாயம்? அந்த கேள்வியை நாம் கேட்க வேண்டும். நான் கடைசியில் நிகழ்ச்சிக்கு வந்ததால் அங்கு என்ன நடந்தது என்பது எனக்கு தெரியவில்லை.
நாயின் குணத்தை பற்றி மட்டும் தான் பேசினேன்
நான் யாரையும் எதிர்த்து எதுவும் பேசவில்லை. யாரையும் வராதீங்க என்று நான் சொல்லவில்லை. நாயின் குணத்தை பற்றி மட்டும் தான் நான் பேசினேன். ஆனால் 9 மணிக்கு மேல் யாரும் வரக்கூடாது என நான் சொன்னதாக போட்டு இருக்கிறார்கள். எடிட் செய்துள்ளாகள். நான் பேசியதை முழுமையாக போடவில்லை. நாய்க்காக பேசுபகர்கள் எல்லாரும் ட்ரோல் செய்யப்படுகிறார்கள். இந்த நிகழ்ச்சியில் எந்த தீர்வு காணப்படாமல் வெறும் விளம்பரத்துக்காகவும், டிஆர்பிக்காகவும் நடத்தப்பட்டுள்ளது.
மக்களிடையே வன்முறையை தூண்டுகிறார்களா?
இதன்மூலம் மக்களிடையே வன்முறையை தூண்டுகிறார்களா? என்ற சந்தேகம் எழுந்துள்ளது. இந்த எபிசோடின் கட் செய்யப்படாத முழு பகுதியையும் ஒளிபரப்பு செய்யும்படி கோபிநாத்திடமும், விஜய் டிவியிடமும் கேளுங்கள். நான் நாயின் குணம், நம்முடைய பிகேவியர், அதற்கான தீர்வு ஆகியவை குறித்து நான் பேசினேன். அந்த தீர்ப்வையும், நம்முடைய பிகேவியரையும் சொன்னதை அவர்கள் போடவில்லை. எனக்கு எதிராகவும், நாய் பிரியர்களுக்கு எதிராகவும் மோசமான விமர்சனங்கள் முன்வைக்கப்படுகின்றன.
நான் பேசிய முழுவதையும் போடவில்லை
நான் நிகழ்ச்சிக்கு வந்ததுக்கு முதல் காரணம் நான் நாய் மீது வைத்துள்ள அன்பும், பிரியமும் தான் காரணம். என்னை நிகழ்ச்சியில் சரியாக பேச விடவில்லை. நான் பேசிய முழுவதையும் போடவில்லை. ஆகவே பொதுமக்கள் யாரும் என்னை தப்பாக நினைக்காதீர்கள். என்னுடையே பேச்சால் பாதிக்கப்பட்டவர்கள் யாரும் காயமடைந்து இருந்தால், நான் பேசியது தவறாக தோன்றினால் என்னை மன்னித்து விடுங்கள். நான் அந்த மாதிரி எந்த எண்னத்திலும் இதில் கலந்து கொள்ளவில்லை. நான் மனிதர்கள் மீதுள்ள அன்பினாலும், நாய் மீதுள்ள அன்பினாலும் தான் அந்த நிகழ்ச்சிக்கு போனேன். என்னை புரிந்து கொள்வீர்கள் என்று நம்புகிறேன்'' என்று தெரிவித்தார்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.