
நடிகர் சத்யராஜ் எப்போதும் பகுத்தறிவு சிந்தனை கொண்டவர். சொல்ல வந்ததை தெளிவாகவும், துணிச்சலுடனும் பேசக் கூடியவர்.
காவிரி விசயத்தில் தங்களை எதிர்த்தாக கூறி சத்யாராஜிற்கு எதிராக கன்னடர்கள் போராட்டம் நடத்தினர்.
மேலும், அவர் நடித்துள்ள பாகுபலி 2 படத்தை கர்நாடகத்தில் வெளியிட கூடாது என்று கடும் எதிர்ப்புத் தெரிவித்தனர்.
அதனைத் தொடர்ந்து, இந்த படம் வெளியாகாமல் இருந்தால் படக்குழுவினர் அனைவரும் பெரிதும் பாதிக்கப்படுவர் என்ற ஒற்றைக் காரணத்தினால் சத்யராஜ் தனது வருத்தம் அவரது பாணியில் தெரிவித்தார்.
மேலும், இனியும் தமிழர்களுக்கும், தமிழுக்கும் எப்பவும் குரல் கொடுப்பேன் என்றும், நான் நடிகன் என்பதைவிட தமிழன் என்று சொல்லிக் கொள்வதின் தான் பெருமை படுகிறேன் என்று போட்டுத் தாக்கினார்.
இதன் பின்னரே, பாகுபலி 2 கர்நாடாகவில் வெளியானது.
தற்போது வேலூர் மாவட்டத்தை சேர்ந்த ரசிகர்கள் உணர்ச்சிவசமிக்க கருத்துக்கள் கொண்டு சத்யராஜ்க்கு ஒரு கட்டவுட் வைத்துள்ளனர்.
அதில், மண்டியிடாத தமிழனே! கன்னடனுக்கு கெட்டப்பா! தமிழனுக்கு கட்டப்பா! கன்னியமிக்க மனிதனே! உலகம் போற்றும் மானத் தமிழனே! என்ற வசனம் இடப் பெற்றிருக்கிறது.
மேலும், பாகுபலி 2 படம் பார்த்த பலரும், அவருக்கு நிச்சயம் தேசிய விருது கிடைக்கும் என்று அடித்துக் கூறுகின்றனர்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.