
இந்திய திரையுலகினர் அனைவருடைய எதிர்பார்ப்பையும் பெற்ற "பாகுபலி 2" அடுத்த மாதம் 28ஆம் தேதி ரிலீஸாக உள்ளது. முதல் பாகத்தில் பல்வேறு கேள்விகளை ரசிகர்களுக்குள் விதைத்த ராஜமௌலி இரண்டாம் பாகத்தில் விடை கூறுவார் என்பதால் அதிக அளவு எதிர்பார்ப்பு உள்ளது.
சமீபத்தில் வெளியான "பாகுபலி 2" படத்தின் ட்ரைலர் இணையத்தளத்தில் 10 கோடிக்கும் மேல் பார்வையாளர்களால் பார்க்கப்பட்டு, உலக அளவில் 7 வது இடத்தை பெற்றும் . இந்திய அளவில் முதல் இடத்தை பிடித்தும் சாதனை படைத்த படமும் இதுதான்.
இந்நிலையில் இந்த படம் எத்தனை தியேட்டர்களில் ரிலீஸ் ஆகிறது என்கிற தகவல் தற்போது வெளியாகியுள்ள்ளது, மேலும் ரிலீஸ் விஷயத்திலும் "பாகுபலி2" சாதனை படைத்ததாகவே பார்க்கப்படுகிறது.
இந்தியாவில் மட்டும் "பாகுபலி2" 6500 தியேட்டர்களில் ரிலீஸாக உள்ளது, அமெரிக்காவில் 750 தியேட்டர்களிலும், உலகம் முழுதும் உள்ள மற்ற நாடுகளில் 1000க்கும் மேற்பட்ட தியேட்டர்களில் ரிலீஸ் செய்யப்பட உள்ளதாக கூறப்படுகிறது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.