அஜித்தின் "10" செண்டிமெண்ட் உங்களுக்கு தெரியுமா...?

Asianet News Tamil  
Published : Mar 23, 2017, 08:57 PM ISTUpdated : Sep 19, 2018, 03:03 AM IST
அஜித்தின் "10" செண்டிமெண்ட் உங்களுக்கு தெரியுமா...?

சுருக்கம்

Ajiths 10 sentimental you know?

தமிழ் சினிமாவில் கிங் ஆப் ஓப்பனிங் கொடுத்து வரும் நடிகர்களில் முக்கியமானவர், தல அஜித். இவருடைய ரசிகர் பலத்தை சொல்லவேண்டியது இல்லை. அவருக்காக எதை வேண்டுமானாலும் செய்வார்கள்.

இவர் இயக்குனர் சிவாவின் இயக்கத்தில் "வீரம்", "வேதாளம்", விவேகம் என தொடர்ந்து நடித்து வருகிறார்.

இவர்கள் இருவரின் காம்பினேஷன் பற்றி சொல்லவே வேண்டாம், கண்டிப்பாக தூள் கிளப்புவார்கள். ஆனால் தொடரும் இவர்களின் செண்டிமெண்ட் பற்றி உங்களுக்கு தெரியுமா...?

"v" என்கிற எழுத்தை முதல் எழுத்தாக  வைத்துதான் பட தலைப்புகள்  அமையும், அதே போல் பஸ்ட் லுக், டீசர், பாடல்கள், படம் ரீலீஸ் என எதுவாக இருந்தாலும் அது வியாழக்கிழமையில் தான் நடைபெறும்.

முதல் முதலில் வியாழக்கிழமைகளில் படத்தை ரிலீஸ் செய்யும் ட்ரெண்டை  தமிழ் சினிமாவிற்கு அறிமுகம் செய்தவரே நம்ப தல தான். இந்த செண்டிமெண்ட் தற்போது பாலிவுட் சினிமாவரை சென்றுவிட்டது.

அதே போல் இவர்கள் இணைத்த படங்கள் 10 ஆம் தேதியன்று தான் ரிலீஸ் செய்யப்பட்டு வருகிறது.

ஏற்கனவே வெளிவந்த "வீரம்"  ஜனவரி 10 ஆம் தேதி 2014 ஆம் ஆண்டு ரிலீஸ் ஆனது.

அதை தொடர்ந்து வந்த "வேதாளம்" 2015 ஆம் ஆண்டு நவம்பர் 10 தேதி  அன்று  ரிலீஸ் செய்யப்பட்டது.

மேலும் தற்போது அனைத்து ரசிகர்களும் எதிர்பார்க்கும், விவேகம் படம் ஆகஸ்ட் 10 தேதி உறுதியாக ரிலீஸ் ஆகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

காரணம் அன்று வியாழக்கிழமையும் கூட என்பது குறிப்பிடத்தக்கது. இந்த தகவலை ஆராய்ந்து உங்களுக்காக பகிர்கிறது 'NEWSFAST' இணையத்தளம்...

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

மீனாவுக்கு சிந்தாமணி வைத்த செக் மேட்... விஜயாவின் ஆசையில் மண்ணை அள்ளிப்போட்ட ரோகிணி - சிறகடிக்க ஆசை ட்விஸ்ட்
சிம்பு முதல் தனுஷ் வரை.. லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா சந்தித்த சர்ச்சைகள்..