
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வரும் '2.0' படத்தின் தயாரிப்பு நிறுவனமான லைகா நிறுவனம், தனது அறக்கட்டளையின் சார்பில் இலங்கையில் உள்ள தமிழர்களுக்கு கொடுப்பதற்காக 150 புதிய வீடுகளை கட்டியுள்ளது.
லைகா நிறுவனர் சுபாஷ்கரன் அல்லிராஜா அவர்களின் தாயார் ஞானாம்பிகை அவர்களின் பெயரில் அமைக்கப்பட்டுள்ள அறக்கட்டளை வவுனியாவின் சின்ன டம்பம் கிராமம் மற்றும் புளியங்குளம் ஆகிய இடங்களில் 150 வீடுகளை கட்டியுள்ளது.
இந்த வீடுகளின் திறப்பு விழா வரும் ஏப்ரல் 9ஆம் தேதி யாழ்ப்பாணத்தில் நடைபெறவுள்ளதாகவும், இந்த
விழாவில் ரஜினிகாந்த் கலந்து கொள்ளவுள்ளார் என்றும் லைகா நிறுவனம் உறுதி செய்துள்ளது.
இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள ரஜினிகாந்திடம் அனுமதி கேட்டபோது அவர் மகிழ்ச்சியுடன் ஒப்புக்கொண்டதக லைகா நிறுவனம் தெரிவித்துள்ளது. மேலும் ரஜினி 150 வீடுகளையும் அவருடைய கைகளால் ஈழத்தமிழருக்கு வழங்க உள்ளதாகவும் கூறியுள்ளனர்.
மேலும் இந்த நிகழ்ச்சியில் இலங்கை வடக்கு மாநில முதலமைச்சர் விக்னேஷ்வரன் உள்பட பல இலங்கை தமிழ் தலைவர்கள் கலந்து கொள்கின்றனர்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.