எக்ஸ்ட்ரா டைம், மிரட்டும் பிரம்மாண்டம்... கான்வென்ட் பொண்ணுங்களும், காலேஜ் குமரிகளும் அடம்பிடிக்கும் "பாகுபலி" மாயம்!

Asianet News Tamil  
Published : Apr 27, 2017, 02:01 PM ISTUpdated : Sep 19, 2018, 03:12 AM IST
எக்ஸ்ட்ரா டைம், மிரட்டும் பிரம்மாண்டம்... கான்வென்ட் பொண்ணுங்களும், காலேஜ் குமரிகளும் அடம்பிடிக்கும் "பாகுபலி" மாயம்!

சுருக்கம்

Baahubali 2 The Conclusion preview Here what the finale of the epic

கட்டப்பா ரகசியம் உடைபடும் நேரம்: கவுண்டவுன் ஸ்டார்ட்ஸ்... ரிசர்வேஷன் ஹவுஸ்புல்! _ ஷாப்பிங் மால் தியேட்டர்களை தவிர வேறெந்த தியேட்டரினுள்ளும் நுழையாத கார்ப்பரேட் குடும்பத்து கால்கள் பாகுபலி_2 விஷயத்தில் மட்டும் அட்ஜஸ்ட் செய்து கொள்வது அடடா ஆச்சரியமே! கொசுக்கடி தியேட்டர்களுக்கு கூட ‘இட்ஸ் ஓகே டாடி! வீ மஸ்ட் வாட்ச் தட் மூவி அட்லீஸ்ட் செகண்ட் டே இட்ஸெல்ஃப்’ என்று கான்வென்ட் பொண்ணுங்களும், காலேஜ் குமரிகளும் அடம்பிடிக்கிறார்கள். இது பாகுபலி மாயம்!


பாகுபலி 1 (தி பிகினிங்)_ல் என்ன இருந்தது என்பதை லேசாக தொட்டுக் கொண்டபடி பாகுபலி 2 (தி கன்குலுசன்) படத்தில் என்னவெல்லாம் இருக்க போகிறது என்பதை திகட்ட திகட்ட ரசிக்கலாம் வாங்க...


ஹிட் ஹாட் இயக்குநர் ராஜமெளலியின் திரைக்கதை மற்றும் இயக்கத்தில் பிரபாஸ், ராணா டகுபதி, அனுஷ்கா , தமன்னா உள்ளிட்ட ஸ்டார்களின் ஜொலிப்பில், கே.கே.செந்தில் குமாரின் கேமெரா வண்ணத்தில் கீரவாணியின் இசையில் உருவானதுதான் பாகுபலி 1. நூற்று எண்பது கோடிகளில் உருவான இந்த படம் பாக்ஸ் ஆபீஸில் அள்ளிய தொகை ஜஸ்ட் அறுநூற்று ஐம்பது கோடி. அதாவது 6.5 பில்லியன். 


ஜெராக்ஸ் எடுத்தது போல் பாகுபலி 2விலும் இதே டீம்தான் இணைந்திருக்கிறது. இதுவே பெரிய சாதனைதான். காரணம் பார்ட் _1ல் பணிபுரிந்த முக்கியமானவர்களில் சிலரை இரண்டாவது பாகத்தில் கழட்டி விடுவதுதான் தென்னிந்திய சினிமாவின் பலநாள் சென்டிமெண்ட். 


பாகுபலி _2வின் உருவாக்க செலவு 2.5 பில்லியன். இதைவிட ஆறேழு மடங்கு லாபத்தை எதிபார்த்திருக்கிறது தயாரிப்பு தரபான ஆர்கா மீடியா ஒர்க்ஸ் நிறுவனம். போட்ட பணத்தை விட இரண்டு மடங்கு! அதாவது ஐந்து பில்லியனை ரிலீஸுக்கு முன்பே பார்த்துவிட்டார்கள். பாகுபலி 1 படத்தை விட இரண்டாம் பாகத்தின் நீளம் அதிகம் என்கிறார்கள். முதல் பாகத்தின் நீளம் தமிழில் 159 நிமிடங்கள். இரண்டாம் பாகத்தின் தெலுங்கு பதிப்பின் நீளம் 171 நிமிடங்களாம். எக்ஸ்ட்ரா டைம், எக்ஸ்ட்ரா பிரம்மாண்டம் மற்றும் எக்ஸ்ட்ரா மிரட்டல். அதனால் ரசிகனுக்கு சோர்வே இல்லை! என்கிறது தயாரிப்பு தரப்பு. 

உலகம் முழுவதும் 9000 க்கும் மேற்பட்ட தியேட்டர்களில் ரிலீஸாக இருக்கும் பாகுபலி_2 வை பற்றி கடந்த பத்து நாட்களுக்கும் மேலாக மாய்ந்து மாய்ந்து பேசிக் கொண்டிருக்கிறது இந்திய திரையுலகம். பாகுபலி பாய்வதால் பல முன்னணி ஹீரோக்கள் தங்கள் திரைப்படங்களை முன்னுக்கும், பின்னுக்குமாய் மாற்றி வைத்தது தனி கதை. 


இந்திய குழந்தைகளின் மனதை கவரும் எந்த கான்செப்டும் கமர்ஷியல் ரீதியில் தாறுமாறான ஹிட் அடிக்குமென்பதை வெள்ளக்காரனே தெரிந்து வைத்திருக்கும் நிலையில் நம்ம ராஜமெளலிக்கு இந்த சூட்சமம் தெரியாதா? பாகுபலி _1 ஐ போலவே பாகுபலி _2வும் குழந்தைகளின் டார்லிங் ஆக இருக்குமென்கிறது படக்குழு. 


பாகுபலி _2 ரிலீஸாவதன் மூலம் கடந்த இரண்டு வருடங்களாக சர்வதேசமும் தலையை பிய்த்துக் கொண்டிருந்த ‘கட்டப்பா ஏன் பாகுபலியை கொன்றான்?’ என்கிற கேள்விக்கு விடை தெரிய போகிறது. பார்ட் 1ல் டம்மியாக காட்டப்பட்ட தேவசேனா அனுஷ்கா இந்த பார்ட்டில் பிரமிக்க வைப்பார் எனும் தகவல் அவரது ரசிகர்களை விழிவிரிய வைத்திருக்கிறது. அதே நேரத்தில் காம்பேக்ட் பியூட்டி தமன்னாவுக்கும் செம ஸ்பேஸ் இருக்கிறதாம். பூ ஒன்று வாள் வீசுவதை பாகுபலி _2 பாகத்திலும் பார்க்கும் பாக்கியம் நமக்கு உண்டு.


பிரபாஸ், ராணா எனும் இரண்டு சிங்கங்களுக்கும் சம சவாலான செம சீன்கள் இரண்டாவது பாகம் முழுக்க நிரம்பி வழிகிறதாம். அதிலும் கிளைமேக்ஸ் காட்சியில் இரண்டு பேரும் மிருகத்தனமாக மோதும் காட்சிகளில் தியேட்டரில் தீ பிடிக்கும் என்கிறார்கள் ரஷ் பார்த்த அதிர்ஷ்டசாலிகள்! (யாருடா நீங்கள்லாம்? உங்களுக்கு மட்டும் எங்கேடா இருக்கு மச்சம்?). கூண்டுக்குள் இரண்டு சிங்கங்கள் மரண வெறியில் மோதிக் கொள்வது போலத்தான் இரண்டு பேரும் அடித்து தகர்த்திருக்கிறார்களாம். பாகுபலி _2ன் போர்க்கள காட்சியில் நகம் தாண்டி விரலையும் நீங்கள் கடிப்பது சத்தியம்! என்கிறார்கள். 

விரல் பத்திரம் ரசிகாஸ்!!!

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

அடேங்கப்பா... ஒரு நாளைக்கு 15 கோடி சம்பளமா? காஸ்ட்லி வில்லனாக உருவெடுத்த கமல்ஹாசன்
என்ன விளையாடுறியா? இதை நாலு செவுத்துக்குள்ள வச்சுக்கய்யா! விஜய்யை கடுமையாக எச்சரித்த சமுத்திரக்கனி