கடனை திருப்பி கேட்டது குத்தமா... ‘சதக் சதக்’ என சரமாரியாக வெட்டிய வில்லன் நடிகரை புடிச்சு ஜெயில்ல போட்ட போலீஸ்

By Ganesh A  |  First Published Jul 27, 2022, 5:32 PM IST

vineeth thattil david : கொடுத்த கடனை திருப்பிக் கேட்க வந்தவரை நடிகர் ஒருவர் சரமாரியாக வெட்டிய சம்பவம் கேரளாவில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.


மலையாள திரையுலகில் வில்லன் நடிகராக வலம் வருபவர் வினீத் தட்டில் டேவில். இவர் சச்சி இயக்கத்தில் கடந்த 2020-ம் ஆண்டு வெளியாகி 3 தேசிய விருதுகளை வென்ற திரைப்படமான அய்யப்பனும் கோஷியும் படத்தில் வில்லனாக நடித்ததன் மூலம் பிரபலமானார். இதுதவிர அங்கமாலி டைரீஸ், ஜூன், திருச்சூர் பூரம் உள்பட ஏராளமான மலையாள படங்களில் நடித்துள்ளார்.

கேரள மாநிலம் திருச்சூர் அருகே உள்ள புத்தன்பீடிகா எனும் பகுதியில் வசித்து வரும் வினீத், ஆலப்புழாவை சேர்ந்த அலெக்ஸ் என்பவரிடம் இருந்து ரூ.6 லட்சம் கடனாக வாங்கி உள்ளார். இதில் 3 லட்சம் ரூபாயை அலெக்ஸிடம் திருப்பி கொடுத்த வினீத், மீதமுள்ள தொகையை கொடுக்காமல் இழுத்தடித்து வந்துள்ளார். இதனால் அவர்கள் இருவருக்கிடையேயும் அடிக்கடி வாக்குவாதம் ஏற்பட்டு உள்ளது.

Tap to resize

Latest Videos

இதையும் படியுங்கள்... லட்ச ரூபாய்க்கு 20 ரூபாய் காயின்கள்... சில்லறை காசுகளை கொடுத்து புது கார் வாங்கிய யூடியூபர் இர்பான்

நேற்று தனக்கு கொடுக்க வேண்டிய பணத்தை கேட்டு வினீத் வீட்டுக்கு சென்றுள்ளார் அலெக்ஸ். அப்போது வழக்கம்போல் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு உள்ளது. ஒரு கட்டத்தில் வாக்குவாதம் முற்றிய நிலையில், அலெக்ஸை அரிவாளால் சரமாரியாக வெட்டி உள்ளார் வினீத். இதையடுத்து அருகில் இருந்தவர்கள் அலெக்ஸை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர்.

இதையடுத்து நடிகர் வினீத் தட்டில் டேவிட் மீது வழக்குப்பதிவு செய்த போலீசார் அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த விவகாரம் தொடர்பாக அவரிடம் போலீசார் விசாரணையும் நடத்தி வருகின்றனர். கொடுத்த கடனை திருப்பிக் கேட்க வந்தவரை நடிகர் ஒருவர் சரமாரியாக வெட்டிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இதையும் படியுங்கள்... சூப்பர் ஹீரோவாக அவதாரம் எடுக்கும் அண்ணாச்சி... அடுத்த படம் குறித்து மாஸ் அப்டேட்டை வெளியிட்ட லெஜண்ட் சரவணன்

click me!