22 சூப்பர் ஹீரோக்கள் ஒரு வில்லனோடு மோதும் அவேஞ்சர்ஸ் இன்பினிட்டி வார் தமிழில்...! ரிலீஸ் தேதி இதோ..!

 
Published : Mar 26, 2018, 03:07 PM ISTUpdated : Sep 19, 2018, 02:07 AM IST
22 சூப்பர் ஹீரோக்கள் ஒரு வில்லனோடு மோதும் அவேஞ்சர்ஸ் இன்பினிட்டி வார் தமிழில்...! ரிலீஸ் தேதி இதோ..!

சுருக்கம்

avengers infinity war in tamil release date announced

மார்வல் காமிக்ஸ் அனைத்து தலைமுறை இளைஞர்கள் மற்றும் குழந்தைகளை கவர்ந்த தயாரிப்பு நிறுவனம். மார்வல் காமிக்ஸ் மூலம் திரையில் வந்து நம்மை கவர்ந்த அனைத்து சூப்பர் ஹீரோக்களுக்கும் இந்த பூமியில் வாழும் அனைத்து மக்களின் மனத்திலும் தனி இடம் உண்டு. 

அனைத்து சூப்பர் ஹீரோக்களையும் இணைத்து நம்மை மகிழ்விக்கும் வகையிலான படைப்பாக கொடுப்பதில் அவேஞ்சர்ஸ்க்கு முக்கிய பங்கு உண்டு. ஒவ்வொரு வெளிவந்த அவேஞ்சர்ஸ் திரைப்படம் மிகப்பெரிய அளவில் வெற்றிபெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. 

இதன் முன்னர் அவேஞ்சர்ஸ் (2012) , இதன் இரண்டாம் பாகம் அவேஞ்சர்ஸ் அல்ட்ரான் ( 2015) ஆகியவை வெளியாகி வெற்றி பெற்றுள்ளது தற்போது இதன் மூன்றாம் பாகம் அவேஞ்சர்ஸ் இன்பினிட்டி வார் (தமிழ் , தெலுங்கு , இந்தி , ஆங்கிலம் ) 22 சூப்பர் ஹீரோக்கள் ஒரு வில்லனோடு ( தாநோஸ் ) மோதும் வகையில் தற்போது வெளியாகவுள்ளது.

படத்தில் இடம்பெற்றுள்ள எல்லா கதாபாத்திரங்களுக்கும் இங்கே பெரிய ரசிகர் பட்டாளமே உள்ளது. 

அவேஞ்சர்ஸ் இன்பினிட்டி வாரில் மிகப்பெரிய ஹாலிவுட் நடிகர் பட்டாளமே உள்ளது 

ராபர்ட் டவுனி ஜூனியர் டோனி ஸ்டார்க் / ஐயர்ன் மேன் கதாபாத்திரத்தில் நடிக்கிறார் 
க்ரிஸ் ஹேம்ஸ்வார்த் தார் என்ற கதாபாத்திரத்திலும் 
மார்க் ரூபலோ ப்ருஸ் பண்ணேர் / ஹல்க் கதாபாத்திரத்திலும் 
க்ரிஸ் ஈவனஸ் ஸ்டீவ் ரோஜெர்ஸ் கதாபாத்திரத்திலும் 
ஸ்கார்லெட் ஜோகன்சன் நடாஷா / ப்ளாக் விடோவ் கதாபாத்திரத்திலும் 
தாம் ஹாலேன்ட் பீட்டர் பார்கர் / ஸ்பைடர் மேனாகவும் 
சாட்விக் போஸ்மன் T ‘சல்லா / ப்ளாக் பாந்தராகவும் 
பவுல் பேட்டனி விசனாகவும் 
எலிசபத் ஒல்சென் வண்டா / ஸ்கார்லெட் விடசாகவும் 
செபஸ்டின் ஸ்டான் பக்கி பர்ன்ஸ் / வைட் வொல்பாகவும் 
டாம் ஹிட்டில்சன் லோகியாகவும் நடித்துள்ளனர்.

இதில் பெரும்பாலும் மார்வல் உலகில் எல்லோரும் ஏற்று நடித்த தங்களுடைய கதாபாத்திரத்தில் தற்போது நடித்துவருகிறார்கள்.
படத்தின் தெலுங்கு வெர்ஷனில் இடம் பெறும் தாநோஸ் கதாபாத்திரத்துக்கு தெலுங்கின் முன்னணி நடிகர் ரானா டகுபாதி டப்பிங் பேசியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

ரூசோ சகோதர்கள் – அந்தோணி ரூசோ மற்றும் ஜோ ரூசோ இப்படத்தை இயக்கியுள்ளனர். ஆலன் சில்வர்ஸ்திரி இசையில் உருவாகியுள்ள இப்படத்துக்கு ஒளிப்பதிவு ட்ரென்ட் ஒப்லேச். அவேஞ்சர்ஸ் இன்பினிட்டி வார் வருகிற ஏப்ரல் 27 ஆம் தேதி இந்தியாவில் நான்கு மொழிகளில் (தமிழ் , தெலுங்கு , இந்தி , ஆங்கிலம் ) வெளியாகிறது.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

சிறகடிக்க ஆசை சீரியல் நடிகர் கைது.. போலீசை எதிர்த்து கேள்வி கேட்டதால் நடவடிக்கை..!
சிலம்ப‘அரசன்’ ஆட்டம் ஆரம்பம்... அதகளமாக தொடங்கிய அரசன் ஷூட்டிங் - எங்கு தெரியுமா?