
இந்தியா முழுவதும் நாளை ரிலீஸாக உள்ள ‘அவெஞ்சர்ஸ் எண்ட்கேம்’ படத்தை நேற்றே ரிலீஸ் செய்து ஒட்டுமொத்த ஹாலிவுட்டையும் அதிர வைத்துள்ளது தமிழ் ராக்கர்ஸ் இணையதளம். இதன் மூலம் ஒட்டுமொத்த உலகை ஆளப் போறான் தமிழன் பாடலுக்கு கொஞ்சம் உயிர் வந்துள்ளது.
புதிய தமிழ்ப் படங்கள் தியேட்டரில் வெளியாகும் அன்று தமிழ் ராக்கர்ஸ் இணையத்தளம் திருட்டுதனமாக இணையத்தில் வெளியிட்டு வருகிறது. இதை தடுக்க பல முயற்சிகள் எடுக்கப்பட்டு வருவதும் அதற்கு எந்த பலனும் இல்லாமல் போவதும் காலகாலமாக நடந்துவரும் கதை.
இந்நிலையில், நாளை மறுநாள் இந்தியா உள்பட உலகம் முழுவதும் வெளியாகவுள்ள 'அவெஞ்சர்ஸ் எண்ட்கேம்' திரைப்படம் நேற்று இரவே தமிழ்ராக்கர்ஸ் இணையதளத்தில் லீக் ஆகிவிட்டது. இதனால் 'அவெஞ்சர்ஸ்' படக்குழுவினர் மற்றும் திரையுலகினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
பல நூறு கோடி ரூபாய் செலவில் தயாரிக்கப்பட்ட இந்த படத்திற்கு பெரும் எதிர்பார்ப்பு இருப்பதால் இந்த படத்தின் வசூல் உலக அளவில் சாதனை செய்யும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தமிழ் ராக்கர்ஸ் தளத்தில் வெளியாகியுள்ள செய்தி அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கி இருக்கிறது. இப்படத்துக்கு இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மான் தீம் பாடல் இசையமைத்திருக்கிறார். இயக்குநர் முருகதாஸ் தமிழ்ப் பதிப்புக்கு வசனம் எழுதியுள்ளார்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.