
23வது ஆசிய தடகளப் போட்டிகள் தோகாவில் நடைபெற்று வருகிறது. இதில் 800 மீட்டா் ஓட்டப்பந்தயத்தில் 30 வயதான தமிழகத்தைச் சோ்ந்த, இந்திய வீராங்கனை கோமதி மாரிமுத்து 2 நிமிடம் 2.70 விநாடிகளில் 800 மீட்டா் தூரத்தை கடந்து முதல் இடத்தை பிடித்தார்
இந்தியாவின் புதிய நம்பிக்கை நட்சத்திரமாக மாறியுள்ள வீராங்கனை கோமதி மாரிமுத்துவுக்கு பல்வேறு தரப்பினர் பாராட்டுதல்களை தெரிவித்து வருகின்றனர். தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, எதிர்கட்சி தலைவர் முக.ஸ்டாலின் உள்பட பலர் வாழ்த்து தெரிவித்தனர்.
தமிழக அரசு சார்பில் இவருக்கான பரிசுத் தொகை அறிவிப்பு இன்னும் வெளியாகத நிலையில், முதல் ஆளாக நடிகர் ரோபோ சங்கர் வீராங்கனை கோமதி மாரிமுத்துவுக்கு ரூ. 1 லட்சம் பரிசுத் தொகை அறிவித்துள்ளார்.
இதுகுறித்து ரோபோ சங்கர் வெளியிட்டுள்ள வீடியோ பதிவில், வீராங்கனை கோமதி மாரிமுத்துவுக்கு அவர் வாழ்த்துகளையும் தெரிவித்துள்ளார். இவருடைய வெற்றி பலருக்கும் உத்வேகம் அளிக்கும் என கூறியுள்ளார்.
ஏற்கனவே காஷ்மீரில் நடந்த புல்வமா தாக்குதலில் உயிரிழந்த அரியலூர் மற்றும் தூத்துக்குடி ராணுவ வீரர்களின் குடும்பத்திற்கு ரோபோ சங்கர் நேரில் ஆறுதல் கூறி தலா ஒரு லட்சம் உதவித்தொகை வழங்கியது குறிப்பிடத்தக்கது
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.