
தெலுங்கில் முன்னணி ஹீரோவாக வலம் வந்து கொண்டிருக்கும் பிரபாஸ், பாகுபலி முதல் மற்றும் இரண்டாம் பாகம் மூலம் ஒட்டுமொத்த இந்தியாவையே திரும்பி பார்க்க வைத்தார். அடுத்து மீண்டும் இந்தியாவை திரும்பி பார்க்க வைக்க திட்டம் போட்டுள்ள பிரபாஸ், தன்ஹாஜி பட இயக்குநர் ஓம் ராவத் இயக்கத்தில் ‘ஆதிபுருஷ்’ என்ற படத்தில் நடிக்கிறார்.
இதையும் படிங்க: ‘ஆசை’ படத்தில் அஜித்திற்கு பதிலாக நடிக்கவிருந்தது இவர் தானாம்?... நல்ல வாய்ப்பை இப்படி நழுவவிட்டுட்டாரே...!
ராமயணத்தின் கதையை மையமாக கொண்டு எடுக்கப்படும் இந்த படத்தில் பிரபாஸ் ராமராக நடிக்க உள்ளார். சைஃப் அலிகான் ராவணன் கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாக சமீபத்தில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது. இந்த படத்தின் ஹீரோயின் அதாவது சீதை கேரக்டரில் முதலில் கீர்த்தி சுரேஷ் நடிப்பதாக கூறப்பட்ட நிலையில், தற்போது கியாரா அத்வானியிடம் பேச்சுவார்த்தை நடைபெறுவதாக கூறப்படுகிறது.
3டி தொழில்நுட்பத்தில் இந்தி மற்றும் தெலுங்கில் உருவாக உள்ள இந்த திரைப்படம், தமிழ், மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் டப் செய்யப்பட உள்ளது. இந்தப் படத்தின் படப்பிடிப்பு 2021-ல் தொடங்கி 2022-ல் படம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த படத்திற்கு விஷுவல் எஃபெக்ட்ஸ் பணிகளை மேற்கொள்ள அவதார் மற்றும் ஸ்டார் வார்ஸ் போன்ற பிரம்மாண்ட ஹாலிவுட் படங்களுக்கு பணியாற்றிய WETA நிறுவனத்தின் VFX தொழில்நுட்ப கலைஞர்களை களமிறக்க படக்குழு திட்டமிட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
இதையும் படிங்க: உடலை இறுக்கிப் பிடித்திருக்கும் உடை... டைட் டிரஸில் தாறுமாறு கவர்ச்சி காட்டும் சீரியல் நடிகை ஷிவானி....!
இந்திய திரையுலகில் பிரம்மாண்ட திரைப்படமாக பார்க்கப்படும் இரண்டு படங்கள் பாகுபலி, ரஜினியின் 2.O படம் தான். அதிலும் சங்கர் இயக்கிய 2.O திரைப்படம் மட்டுமே முழுவதும் 3டி தொழில்நுட்பத்தில் தயாரிக்கப்பட்டது. அதையடுத்து ஆதிபுருஷ் படத்தை ஹாலிவுட் அளவிற்கு தயாரிக்க திட்டமிட்டுள்ளனர். பிரபல ஹாலிவுட் படங்களான 300 பருத்திவீரர்கள், கிராவிட்டி, சின் சிட்டி உள்ளிட்ட படங்களைப் போல், இந்த படமும் முழுக்க முழுக்க ஸ்டுடியோவிலேயே காட்சிப்படுத்தப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.