கங்கனாவின் அலுவலக கட்டிடத்தில் கை வைக்க இடைக்கால தடை... மும்பை உயர் நீதிமன்றம் அதிரடி...!

manimegalai a   | Asianet News
Published : Sep 09, 2020, 04:40 PM IST
கங்கனாவின் அலுவலக கட்டிடத்தில் கை வைக்க இடைக்கால தடை... மும்பை உயர் நீதிமன்றம் அதிரடி...!

சுருக்கம்

அதற்கு மும்பை மாநகராட்சியிடம் எவ்வித அனுமதியும் வாங்கவில்லையாம், அதனால் அதிகாரிகள் நோட்டீஸ் ஓட்டினர். மேலும் விதிமுறைகளை மீறி கட்டிடம் கட்டப்பட்டுள்ளதாக கூறி இன்று காலை அந்த கட்டிடத்தை இடித்தனர்

பாலிவுட் நடிகர் சுஷாந்தின் மரணம், பாலிவுட் மாஃபியா, போதைப்பொருள் புழக்கம் என அடுத்தடுத்து அதிர்ச்சி தகவல்களை வெளியிட்டு வரும் கங்கனாவிற்கும், மகாராஷ்ட்ராவின் ஆளும் கட்சியான சிவசேனாவிற்கு மோதல் போக்கு வலுத்துள்ளது. அடிக்கடி சிவசேனாவை எதிர்த்து கங்கனா கருத்து பதிவிட்டு வந்ததால், அக்கட்சியின் தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். விமர்சனத்தின் உச்சமாக மும்பையை மினி பாகிஸ்தான் போல் உணர்வதாகவும், பாதுகாப்பற்ற நகரமாக நினைப்பதாகவும் அடுத்தடுத்து புகார்களை தெரிவித்தார். 

இந்த சூழலில் நடிகை கங்கனா ரணாவத்துக்கு மத்திய அரசு, மத்திய ரிசர்வ் போலீஸ் படையின் 'ஒய்' பிளஸ் பாதுகாப்பு அளித்துள்ளது. ஆயுதம் தாங்கிய 10 கமாண்டோக்கள் 'ஷிப்ட்' அடிப்படையில் 24 மணி நேரமும் பாதுகாப்பு அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் மும்பையின் புறநகர் பகுதியான பாந்த்ராவில் உள்ள பாலிஹில்லில் கங்கனா ரணாவத்தின் அலுவலகத்தில் கட்டுமான பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. கழிப்பறை இருந்த இடத்தில் அலுவலகம் கட்டப்பட்டு வருகிறது. படிக்கட்டு இருந்த இடத்தில் கழிப்பறைகள் கட்டப்பட்டு வருகின்றன.

அதற்கு மும்பை மாநகராட்சியிடம் எவ்வித அனுமதியும் வாங்கவில்லையாம், அதனால் அதிகாரிகள் நோட்டீஸ் ஓட்டினர். மேலும் விதிமுறைகளை மீறி கட்டிடம் கட்டப்பட்டுள்ளதாக கூறி இன்று காலை அந்த கட்டிடத்தை இடித்தனர். இதை எதிர்த்து கங்கனா மும்பை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அதை விசாரித்த நீதிமன்றம், அலுவலக கட்டிடத்தை இடிக்க இடைக்கால தடை விதித்தது. மேலும் மனு குறித்து பதிலளிக்கும் படியும் மும்பை மாநகராட்சிக்கு உத்தரவிட்டுள்ளது. இதையடுத்து அலுவலகத்தை இடிக்கும் பணியை அதிகாரிகள் கைவிட்டனர். 
 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

மீண்டும் சிங்கநடை போட வரும் ரஜினி... படையப்பா 2 பற்றி ஹிண்ட் கொடுத்த சூப்பர்ஸ்டார்..!
கிரிஷ் மீது பாசமழை பொழியும் மனோஜ்... ரோகிணி ஹேப்பி; விஜயாவுக்கு ஏறும் பிபி - சிறகடிக்க ஆசை சீரியல் அப்டேட்