வாழ்க்கை எனக்கு நிறைய கற்றுக்கொடுத்துவிட்டது - அட்டக்கத்தி தினேஷ்! 

 
Published : Dec 21, 2017, 07:19 PM ISTUpdated : Sep 19, 2018, 01:43 AM IST
வாழ்க்கை எனக்கு நிறைய கற்றுக்கொடுத்துவிட்டது - அட்டக்கத்தி தினேஷ்! 

சுருக்கம்

attakathi thinesh sad talk in press meet

நடிகர் தினேஷ் நடிப்பில் 'கபாலி' படத்திற்கு பின் அவர் சோலோ ஹீரோவாக நடித்து வெளிவர தயாராக இருக்கும் திரைப்படம் "உள்குத்து". இந்த திரைப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு இன்று நடைபெற்றது இதில் படத்தின் நாயகன் தினேஷ், தயாரிப்பாளர் விட்டல் குமார்  , இயக்குநர் கார்த்திக் ராஜு , இசையமைப்பாளர் ஜஸ்டின் பிரபாகரன் , ஒளிப்பதிவாளர் P.K.வர்மா , நடிகர் பாலசரவணன் உள்ளிட்ட படக்குழுவினர் பலர் கலந்து கொண்டு பேசினர்.

நடிகர் தினேஷ் பேசுகையில் நீண்ட நாட்களுக்கு பிறகு நான் கதாநாயகனாக நடிக்கும் திரைப்படம் வெளியாகிறது. வாழ்க்கை எனக்கு இந்த இடைவெளியில் நிறைய விஷயங்களை எனக்கு கற்றுதந்துள்ளது. எனக்கு நெருக்கமாக இருந்த சிலர் தூரமாக சென்றுள்ளனர். தூரமாக இருந்த சிலர் இன்று எனக்கு நெருக்கமாக உள்ளனர். கபாலி படத்துக்கு பிறகு இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பின் போது அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி என்றார்.

இதைதொடர்ந்து  உள்குத்து திரைப்படம் வெளியாவதற்கு முக்கியமான காரணம் கடவுளும் , விஷால் சாரும் தான். கடவுளுக்கு நன்றி விஷால் சாருக்கு நன்றி. படம் வெளியாகுமா என்ற நிலை இருந்த போது விஷால் சார் தலையிட்டு தன்னுடைய படத்தை போல் நினைத்து இப்படத்தை வெளியிட்டு தந்துள்ளார். நான் இந்த படத்தை வெளியிடுவதற்கு இன்னொரு முக்கிய காரணம் என்னுடைய மனைவி தான். அவர் தான் எனக்கு ஊக்கம் தந்து இப்படத்தை வெளியிட எனக்கு உதவியுள்ளார். 

படத்தை தயாரிப்பாளரிடம் இருந்து வாங்கி நான் வெளியிடுகிறேன். அவருடைய சூழ்நிலையால் அவரால் இப்படத்தை வெளியிட முடியவில்லை. இந்த படத்தை ‘திருடன் போலீஸ்’ படத்தை இயக்கிய கார்த்திக்ராஜு இயக்கியுள்ளார். படத்தில் அட்டகத்தியில் நடித்த தினேஷ் கதாநாயகனாகவும்,  நந்திதா கதாநாயகியாகவும், காமெடியனாக பாலசரவணன், சூப்பர் சுப்புராயன் அவர்களின் மகன் திலீப் சுப்புராயன் முக்கிய வில்லனாகவும், ஜான்விஜய், சாயாசிங்க் ஆகியோர் நடித்துள்ளார்கள். ஜஸ்டின் இசை அமைத்து, வர்மா ஒளிப்பதிவு செய்துள்ளார். உள்குத்து படமானது தற்போதைய நாட்டின் நிலைமையை எடுத்துக்கூறும் படமாக இருக்கும். ஐம்பதாயிரம் சம்பாதிப்பவர்களில் இருந்து ஒரு லட்சம் சம்பாதிப்பவர்கள் வரை தன் செலவுக்கு அவை பத்துவதில்லை எனவே வெளியில் கடன் வாங்குவார்கள் வட்டி கட்டுவார்கள் இது எல்லா இடத்திலும் காணப்படும் உண்மை இதனை மையப்படுத்தி இந்த திரைப்படம் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

அய்யய்யோ மீனா கண்டுபிடிச்சிட்டாளே... சீட்டிங் பண்ணி சிக்கிய ரோகிணி - சிறகடிக்க ஆசை சீரியல் அப்டேட்
அஞ்சானை அரெஸ்ட் பண்ண உத்தரவா? கைது நடவடிக்கை பற்றி உண்மையை போட்டுடைத்த லிங்குசாமி