அடுத்த படத்துக்கு ’இதுக்காகத்தான்’ அட்லியை டைரக்டரா போட்டாராம் விஜய்

By vinoth kumarFirst Published Nov 15, 2018, 10:52 AM IST
Highlights

சும்மா ஒரு அறிவிப்புதான் வந்திருக்கிறது. அதற்குள் அட்லீ-விஜய் காம்பினேஷனை வச்சு செய்ய ஆரம்பித்துவிட்டார்கள் நம்ம வலைஞர்கள். ‘அட்லீ விஜயை வச்சு என்ன கதையை எடுக்கப்போறார்ங்கிறதை விட என்ன படங்களையெல்லாம் சுட்டு எடுக்கப்போறார்ங்குற ஆவல்தான் அதிகமா இருக்கு’ என்று தொடங்கி வாட்ஸ் அப், ட்விட்டர் வலைதளங்களில் விஜய் 63 படத்துக்கு பப்ளிசிட்டி இப்போதே களை கட்ட ஆரம்பித்துவிட்டது.

திருட்டுக் கதை தொடர்பாக அளவுக்கு அதிகமாகவே அசிங்கப்பட்டுப்போன நிலையில், பிட்டு பிட்டாய் சுட்டு படம் எடுக்கும் முருகதாஸின் இன்னொரு குட்டி வெர்சனான அட்லீயை அடுத்த படத்துக்கு விஜய் இயக்குநரமாக்க மாட்டார் என்றே பலரும் எதிர்பார்த்தார்கள். ஆனால் அனைவர் எண்ணத்திலும் ஒரு வண்டி மண்ணை அள்ளிப்போட்டு அட்லீயையே இயக்குநராக அறிவித்துவிட்டார் விஜய்.

‘ராஜா ராணி’,’தெறி’, ‘மெர்சல்’ என மூன்று படங்களை இயக்கியிருக்கும் அட்லீ, தனது படக்கதையை ஒரு குறிப்பிட்ட படத்திலிருந்து திருடாமல் பல்வேறு படங்களிலிருந்து பிட்டு பிட்டாய் எடுத்து கையாள்வதில் கைதேர்ந்தவர்.  ரஜினியின் ‘எட்டு எட்டாய் மனித வாழ்வைப் பிரிச்சுக்கோ’ பாடலையே ‘பிட்டு பிட்டாய் கதையைத் திருடி பொழைச்சிக்கோ என்றுதான் அட்லீ பாடுவாராம் என்றால் பார்த்துக்கொள்ளுங்களேன்.

‘சர்கார்’ திருட்டுக்கதை பஞ்சாயத்து சமயத்தில் ‘அண்ணே தேங்காய் திருடமுன்னு முடிவு பண்ணிட்டா அதை ஒரே மரத்துல இருந்து இறக்காம, மரத்துக்கு ஒண்ணா திருடினா ஒரு பயலும் கண்டுபுடிக்க மாட்டாங்கன்ணே’ என்று இவர் முருகதாஸுக்கு ஆலோசனை சொல்வது போல் வந்த ஒரு மீம் மிகப்பிரபலம்.

இந்நிலையில் தன்னை வைத்து அடுத்த படத்தை இயக்கவிருக்கும் அட்லீ கண்டிப்பாக பல மரங்களிலிருந்து இறக்கியே ஒரு கதையை உருவாக்கியிருப்பார் என்பது விஜய்க்கு உறுதியாகத் தெரியும். இதுவும் வலைதளங்களில் செமயாக கலாய்க்கப்படும் என்பதும் விஜய்க்குத் தெரியும். இதை ஒரு அசிங்கம் என்று கருதாமல் படத்துக்குக் கிடைக்கும் இலவச பப்ளிசிட்டி என்றே விஜய் நம்புகிறார். ‘விஜய் 63’ படத்துக்கு மறுபடியும் அட்லிக்கு இட்லி சுட வாய்ப்புக்கிடைத்தது இதற்காகத்தானாம்.

click me!