
அஜீத்தின் ‘விஸ்வாஸம்’ படத்தின் தமிழக உரிமையை வாங்கியுள்ள நயன்தாராவின் பினாமி நிறுவனம் அடுத்து சிவகார்த்திகேயனுடன் பார்ட்னர்ஷிப்பாக இணைந்து படத்தயாரிப்பிலும் இறங்க உள்ளது. இந்தக் கூட்டுத்தயாரிப்பின் மூலம் சிவகார்த்திகேயனும், நயனும் மிக நெருங்கிய பார்ட்னர்களாகிவிட்டதாக கிசுகிசுக்கப்படுகிறது.
‘இரும்புத்திரை’ படத்தை இயக்கிய பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்க சிவகார்த்திகேயன் ஒப்பந்தமானார். இப்படத்தை 24 ஏ.எம் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரிப்பதாக முன்னதாக தகவல் வெளியான நிலையில், தற்போது கே.ஜே.ஆர் ஸ்டுடியோஸ் நிறுவனமும் 24 ஏம் ஸ்டுடியோஸ் நிறுவனத்துடன் இணைந்து சிவகார்த்திகேயனின் புதிய படத்தை தயாரிக்க இருப்பதாக செய்திகள் வெளியாகியிருக்கின்றன.
24 ஏ.எம் ஸ்டுடியோஸ் நிறுவனத்தின் உரிமையாளர் மற்றும் நிறுவனர் ஆர்.டி.ராஜா, என்றாலும் இந்த நிறுவனம் சிவகார்த்திகேயனின் பினாமி நிறுவனம் என்பது ஊரறிந்த சமாச்சாரம் . அதேபோல், ‘அறம்’ படத்தை தயாரித்த கே.ஜே.ஆர் ஸ்டுடியோஸ், தற்போது நயந்தாரா நடிக்கும் ‘ஐரா’ படத்தை தயாரிப்பதோடு அஜித்தின் ‘விஸ்வாசம்’ படத்திலும் இணை தயாரிப்பாளராக இணைந்துள்ளது. இது நயன் தாராவின் பினாமி நிறுவனம் என்பதும் அதே ஊரறிந்த அதே சமாச்சாரம். இந்நிறுவனத்தின் உரிமையாளர் என்று சொல்லப்படுகிற கொடப்பாடி.ஜே.ராஜேஷ் நயனின் மேனேஜர் ஆவார்.
ஸோ திரையில் மட்டும் கூட்டணி போட்டுக்கொண்டிருந்த சிவாவும் நயனும் அடுத்த கட்டமாக தயாரிப்பிலும் பார்ட்னர்ஷிப் போட்டிருக்கிறார்கள். விக்னேஷ் சிவனுக்கு எந்த ஆபத்தும் வராதவகையில் இக்கூட்டணியின் பாட்டணி அமைய வாழ்த்துகள்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.