
கடந்த ஆண்டு சிறு பட்ஜெட்டில் வெளிவந்து மிகப்பெரிய வெற்றிபெற்ற திரைப்படம் அருவி. இந்த படத்தில் கதாநாயகியாக அறிமுகமான நடிகை அதிதி பாலனுக்கு இந்தப்படம் நல்ல பெயரை பெற்று தந்தது.
இந்த படத்தை தொடர்ந்து பல படங்களில் நடிக்க இவருக்கு வாய்ப்புகள் வந்தும், எதையும் ஏற்காமல் இருந்து வருகிறார்.
இந்நிலையில் இவர் சமீபத்தில் ஒரு பத்திரிக்கை நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசினார். அப்போது இவர் வாழ்க்கையில் மறக்க முடியாத, கதறி அழ வைத்த சம்பவத்தை கூறியுள்ளார்.
இவர் கல்லூரியில் படிக்கும் போது நடந்த அந்த துயர சம்பவம் நடைபெற்றதாகவும் கூறினார்.... இவர் கல்லூரி படிக்கும் காலத்தில் இவருக்கு ஒரு சிறுமியை நன்கு தெரியுமாம். ஆதரவற்ற அந்த சிறுமிக்கு அதிதி மற்றும் அவருடைய நண்பர்கள் பல உதவி செய்துள்ளார்களாம்.
சில நாட்களுக்கு அந்த சிறுமியை பார்க்கவே முடியவில்லையாம். அந்த சிறுமி பற்றி விசாரிக்கையில் இந்த சிறுமியை ஆட்டோவில் வந்த மர்ம நபர்கள் கடத்தி பாலியல் வல்லுறவு செய்து கொலை செய்துவிட்டதாக கூறியுள்ளனர் அக்கம் பக்கத்தினர்.
இதை கேட்டு அவர் கண் கலங்கியதோடு அந்த ஆட்டோவை பிடித்தால் எல்லாம் தெரிந்தவிடும் என முயற்சி எடுக்க நினைத்தாராம்... மற்றவர்கள் உடனே வேண்டாம் மா உன்னை ஏதாவது செய்துவிடுவார்கள் என கூறினார்களாம்.
இதை நினைத்தாலே தனக்கு இப்போதும் அழுகை வருகிறது என கண் கலங்கி விட்டார். மேலும் இது போன்ற ஆதரவற்ற குழந்தைகளை பாலியல் தொல்லை செய்து கொலை செய்த கொடியவர்களை கொடுமையான முறையில் தண்டிக்க வேண்டும் என மேடையிலேயே கதறி அழுதார்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.