
பிரபல நடிகர் முரளியின் மகனான அதர்வா ‘பாணா காத்தாடி’ என்கிற திரைப்படத்தின் மூலமாக தமிழ் திரையுலகில் அறிமுகமானார். தொடர்ந்து அவர் நடிப்பில் வெளியான ‘பரதேசி’, ‘சண்டிவீரன்’, ‘முப்பொழுதும் உன் கற்பனைகள்’ திரைப்படங்கள் விமர்சன ரீதியாக வெற்றி பெற்றன. அதைத் தொடர்ந்து அவர் நடித்த எந்த திரைப்படமும் அவருக்கு பெரிய அளவில் கை கொடுக்கவில்லை. இதனால் அதர்வாவின் மார்க்கெட் தொடர்ந்து சரிவைக் கண்டது. வித்தியாசமான கதையம்சம் கொண்ட படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வரும்போதிலும், அதர்வாவுக்கு திருப்புமுனையைக் கொடுக்கும் அளவிற்கு எந்தப் படங்களும் சமீப காலமாக அமையவில்லை.
இந்த நிலையில் கதாநாயகனாக அதர்வா நடிப்பில் உருவாகி இருக்கும் திரைப்படம் தான் ‘டிஎன்ஏ’. இதை ‘ஒருநாள் கூத்து’, ‘மான்ஸ்டர்’, ‘பர்ஹானா’ போன்ற திரைப்படங்களை இயக்கிய நெல்சன் வெங்கடேசன் இயக்கி இருக்கிறார். இந்த திரைப்படம் வருகிற ஜூன் 20 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. அதர்வா, நிமிஷா சஜயன், பாலாஜி சக்திவேல், ரமேஷ் திலக், விஜி சந்திரசேகர், சேத்தன், ரித்திகா, கருணாகரன் ஆகிய பலர் இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஒலிம்பியா மூவிஸ் நிறுவனம் சார்பில் அம்பேத்குமார் மற்றும் ஜெயந்தி அம்பேத்குமார் இந்த படத்தை தயாரித்துள்ளனர்.
இந்த படத்திற்கு ஐந்து இசையமைப்பாளர்கள் இசையமைத்துள்ளனர். சத்ய பிரகாஷ், ஸ்ரீகாந்த் ஹரிஹரன், பிரவீன் சாய்வி, சாஹி சிவா மற்றும் அனல் ஆகாஷ் ஆகியோர் இணைந்து படத்திற்கு இசையமைத்துள்ளனர். படத்தின் பின்னணி இசையை ஜிப்ரான் அமைத்துள்ளார். இந்த படத்தில் இருந்து வெளியான பாடல்கள் அனைத்துமே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. ஹாரர் திரில்லர் அடிப்படையில் உருவாகி இருக்கும் இந்த படத்தின் டிரெய்லர் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.
அதர்வாவுக்கும், நிமிஷாவுக்கும் திருமணம் நடக்கிறது. திருமணத்திற்குப் பின்னர் அவர்களுக்கு பிறக்கும் குழந்தைக்கு ஏதோ அசம்பாவிதம் நடக்க, அதை சுற்றி என்ன நடக்கிறது என்கிற கதையை அடிப்படையாகக் கொண்டு டிரெய்லர் நகர்கிறது. இதில் நிமிஷாவின் கதாபாத்திரம் மனநிலை பாதிக்கப்பட்ட கதாபாத்திரமாக இருப்பதாக தெரிய வருகிறது. டிரெய்லரைப் பார்க்கும்பொழுது இந்த படம் மிகவும் விறுவிறுப்பாக என்றும் தெரிகிறது. அதர்வாவிற்கும் இது ஒரு கம் பேக் படமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.