ஸ்ரேயா போயாச்சு... இப்போ அனுஷ்காவாம்...! அசுரன் தெலுங்கு ரீமேக்கில் நடிக்கப்போகும் ஹீரோயின்தான் யாருப்பா?

Published : Nov 18, 2019, 09:07 AM IST
ஸ்ரேயா போயாச்சு... இப்போ அனுஷ்காவாம்...! அசுரன் தெலுங்கு ரீமேக்கில் நடிக்கப்போகும் ஹீரோயின்தான் யாருப்பா?

சுருக்கம்

கடந்த மாதம் தனுஷ் - வெற்றிமாறன் கூட்டணியில் வெளியான படம் 'அசுரன்'. பூமணியின் 'வெக்கை' நாவலை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்ட இந்தப் படம், விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் அமோக வரவேற்பை பெற்றது. 

படத்தில் தனுஷின் நடிப்பும் ரசிகர்களால் கொண்டாடப்பட்டது. தமிழில் அசுரனுக்கு கிடைத்த அசுரத்தனமான வரவேற்பால், இந்தப் படம் தெலுங்கில் ரீமேக்காகிறது. அங்கு, தனுஷ் நடித்த கேரக்டரில் தெலுங்கு முன்னணி நடிகர் வெங்கடேஷ் நடிக்கவுள்ளதாக ஏற்கெனவே அறிவிக்கப்பட்டது.


ஆனால், படத்தின் இயக்குநர், ஹீரோயின் யார்? என்பதில் மட்டும் குழப்பம் நீடித்து வருகிறது. 'அசுரன்' தெலுங்கு ரீமேக்கை  ஸ்ரீகாந்த் அத்தலா, ஹனு ராகவபுடி ஆகியோரில் ஒருவர் இயக்குவார்கள் என கூறப்பட்டது. 

தற்போது, இந்தப் படத்தை ஸ்ரீகாந்த் அத்தலாவே இயக்குவார் என தெரிகிறது. இதேபோல், தனுஷின் மனைவியாக நடித்த பிரபல மலையாள நடிகை மஞ்சுவாரியார் கேரக்டரில் யார்? நடிக்கபோகிறார்கள் என்றும் தெரியவில்லை. 

முன்னதாக, இந்தப் படத்தில் ஸ்ரேயா ஹீரோயினாக நடிப்பதாகக் கூறப்பட்டது. தற்போது, மஞ்சுவாரியார் கேரக்டரில் நடிக்க அனுஷ்காவிடம் தயாரிப்பு தரப்பு பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. கூடிய விரைவில் 'அசுரன்' தெலுங்கு ரீமேக்கின் ஹீரோயின் குறித்து தயாரிப்பு தரப்பு ஒரு முடிவுக்கு வரும் என்றும், விரைவில் இதுதொடர்பான அறிவிப்பு வெளியாகும் என்றும் எதிர்பார்க்கலாம்.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

Sigma Review by Blue Sattai : சிக்மா படத்தின் மிகப்பெரிய மைனஸ் இதுதான்... விமர்சனத்தில் புட்டு புட்டு வைத்த ப்ளூ சட்டை மாறன்
Siragadikka Aasai Salary : முத்து vs மீனா... அதிக சம்பளம் யாருக்கு? சிறகடிக்க ஆசை சீரியல் நட்சத்திரங்களின் சம்பள விவரம் இதோ