நயன் வேண்டாம் தல!: விஜய் ரசிகர்களை தொடர்ந்து அஜித் ரசிகர்களும் நயன் தாரா மீது வெறுப்பு!

Published : Nov 17, 2019, 04:50 PM IST
நயன் வேண்டாம் தல!:	விஜய் ரசிகர்களை தொடர்ந்து அஜித் ரசிகர்களும் நயன் தாரா மீது வெறுப்பு!

சுருக்கம்

ஹெச்.விநோத் இயக்கிட அஜித் நடிக்க இருக்கும் ‘வலிமை’ படத்தில்  விஸ்வாசத்தை தொடர்ந்து மீண்டும் ஜோடி போடுகிறார் நயன். ஆனால் தல ரசிகர்களுக்கு இது பிடிக்கவில்லை. காரணம் பிகில் படத்தில் நயனின் லுக் ஜொலிக்கவில்லை. விஜய்க்கு அக்கா மாதிரி இருகிறார் என்று கமெண்ட்கள் வந்து விழுந்தன. 

* வடிவேலுவின் அடுத்த சீசன் துவங்க இருக்கிறது! என்று ஆளாளுக்கு சந்தோஷப்பட்ட ‘இம்சை அரசன் பார்ட் 2’ படம் அவரது முரண்டு குணத்தால்  ஊத்தி மூடிவிட்டது. அதேபோல் ‘பேய் மாமா’ படம் கைமாறிவிட்டது, அதேபோல் ‘நீயும் நானும், நடுவுல பேயும்’ படமும் பஞ்சாயத்தில் நிற்கிறது. இந்த சூழலில், அவர் நடிக்க இருக்கும் கமல்ஹாசனின்‘தலைவன் இருக்கிறான்’ பட தயாரிப்பு நிறுவனம், அஜித்தின் ‘வலிமை’ நிறுவனம் இரண்டும் வடிவேலு பற்றி டவுட்டில் உள்ளனர். 

* ஸ்ருதிஹாசன் தன் கவர்ச்சியை அள்ளிக் கொட்டி, தாறுமாறாக விருந்து படைத்தது தெலுங்கில்தான். அல்லு அர்ஜூனுடன் இவர் நடித்த ‘ரேஸ் குர்ரம்’ படத்தின் கிளாமர் காட்சிகள் அக்கட ரசிகர்களை தூங்க விடவில்லை. தென்னிந்திய சினிமாவிலிருந்து சற்றே ஒதுங்கியிருந்த ஸ்ருதி இப்போது மீண்டும் ‘கிராக்’ படத்தின் மூலம் தெலுங்கில் ரீ எண்ட்ரி ஆக இருக்கிறார்.  தெலுங்கும் தனது தாய் வீடு! என்று வேறு சென்டிமெண்டாக ஸ்ருதி செப்பியிருப்பதால் டோலிவுட் ரசிகர்கள் செம்ம ஜாலி. 

* ரஜினி படத்தில் யுவன் கமிட் ஆவது போல் இருப்பதும், பின் அது தள்ளிப் போவதும் தொடர் கதையாக இருந்தது. இப்போது சிவா இயக்கத்தில் அவர் நடிக்கப்போகும் படத்தில் நிச்சயம் யுவன் இருக்கிறார்! என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில்,  இமான் டிக் ஆகியிருக்கிறார். ரஜினி ப்ராஜெக்ட்களில் இருந்து தன்னை கழட்டி விடுவது யார்? என்று சிலரை சந்தேகிக்க துவங்கியுள்ளாராம் யுவன் . 

* ஹெச்.விநோத் இயக்கிட அஜித் நடிக்க இருக்கும் ‘வலிமை’ படத்தில்  விஸ்வாசத்தை தொடர்ந்து மீண்டும் ஜோடி போடுகிறார் நயன். ஆனால் தல ரசிகர்களுக்கு இது பிடிக்கவில்லை. காரணம் பிகில் படத்தில் நயனின் லுக் ஜொலிக்கவில்லை. விஜய்க்கு அக்கா மாதிரி இருகிறார் என்று கமெண்ட்கள் வந்து விழுந்தன. விஜய்யின் சில ரசிகர்கள் ‘நயனுக்கு ஆண்ட்டி லுக் வந்துடுச்சு’ என்று வெளிப்படையாகவே கொளுத்திப் போட்டனர். இந்த சூழலில் அஜித்தின் ரசிகர்களும் நயனை வெறுப்பது அதிர்ச்சி. ஏன்? என்று கேட்டால், நயன் தாராவிடம் ஒரு புத்துணர்ச்சியே இல்லை! முதிர்ந்த தோற்றத்தில் முற்றலாக இருக்கிறார்! என்கின்றனராம். 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

ரோகிணிக்குள் நுழைந்த ஆவி - அதிர்ச்சியில் மனோஜ்! 'சிறகடிக்க ஆசை' சீரியல் லேட்டஸ்ட் அப்டேட்!
டுவிஸ்ட் மேல டுவிஸ்ட்; வச்சான் பாரு ஆப்பு; பிக் பாஸில் வெளியேற்றப்படும் போட்டியாளர் இவரா?