
தனுஷ் வெற்றிமாறன் இயக்கத்தில், இரட்டை வேடங்களில் நடித்து வரும் திரைப்படம் 'அசுரன்'. இந்த படத்தில் இதுவரை தனுஷ் நடித்திராத புதிய கெட்டப்பில் நடித்துள்ளார். இவருக்கு ஜோடியாக பிரபல மலையாள நடிகை மஞ்சு வாரியர் நடித்துள்ளார்.
இந்த படத்தை, தயாரிப்பாளர் தாணு தயாரித்துள்ளார். இந்த படத்தின் ட்ரைலர், சமீபத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், தற்போது இந்த படத்தில் இருந்து காதல் பாடலான 'மினுக்கி' பாடல் வெளியாகியுள்ளது.
ஜி.வி.பிரகாஷ் இசையில் உருவாகியுள்ள இந்த பாடலை டிஜே மற்றும் சின்மயி ஆகியோர் பாடியுள்ளனர். இந்த பாடலுக்கு ஏக்நாத் பாடல் வரிகளை எழுதியுள்ளார். "ஒத்த நிலவைப்போல குத்த வச்ச அழகுதம்ல" என தொடங்கும் இந்த பாடல், கிராமத்து பெண்ணின் அழகை காதலன் வார்ணிப்பது போல் அமைந்துள்ளது.
அடுத்த மாதம் நான்காம் தேதி, ரிலீஸ் ஆக உள்ள இந்த படத்தின் ப்ரோமோஷன் பணிகள் தற்போது சூடு பிடிக்க துவங்கியுள்ளது. மேலும் தனுஷ் ரசிகர்களும் இந்த படத்தின் ரிலீஸை எதிர்பார்த்து காத்து கொண்டிருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
மினுக்கி லிரிக்கள் பாடல் இதோ...
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.