
நடிகர் விஜய் அரசியலுக்கு வர வேண்டும் என்பது அவரது ரசிகளின் விருப்பம். பல்வேறு விதங்களில் அதனை தெரியப்படுத்துவதை ரசிகர்கள் வாடிக்கையாக வைத்துள்ளனர். விஜய்யும் தனது ஆசையை மேடைகள் தோறும் முழங்குவார். ஜெயலலிதா, கருணாந்தி காலத்திலேயே தனது ரசிகர்களின் ஆதரவால் அரசியலில் கால்தடம் பதிக்க மாஸ்டர் பிளான் போட்டு வந்தார் விஜய்.
தற்போது அவர்கள் இருவரும் இல்லாததால், அந்த வெற்றிடத்தை நிரப்ப நடிகர் விஜய் திட்டமிட்டு உள்ளாராம். இதற்காக தனது அரசியல் நகர்வுகளை விஜய் சைலண்டாக செய்யத் தொடங்கி உள்ளதாக கூறப்படுகிறது.
சமீபத்தில் நடந்து முடிந்த உள்ளாட்சி தேர்தலில் விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகள் களமிறங்கி வெற்றி வாகை சூடியது விஜய்க்கும் மிகுந்த உற்சாகத்தை கொடுத்தது. போட்டியிட்ட 169 இடங்களில் 115 பேர் வெற்றி பெற்று விஜய்யை ஆச்சர்யப்படுத்தினர். இதனால் உற்சாகத்தில் திளைத்த விஜய், அவர்களை நேரில் அழைத்து பாராட்டினார்.
இவ்வாறு தனது அரசியல் நகர்வுகளை படிப்படியாக செய்து வரும் விஜய் எப்போது அரசியலுக்கு வருவார் என்பது ரசிகர்களின் நீண்ட நாள் கேள்வியாக இருந்து வருகிறது. தற்போது அதனை ஜோதிடர் ஒருவர் கணித்து கூறி உள்ளார். அதன்படி 7 வருடங்கள் கழித்து விஜய் அரசியலுக்கு வருவார் என்றும், அவர் அரசியலுக்குள் வரும்போது, அவருடைய மகன் ஜேசன் சஞ்சய் சினிமாவில் ஹீரோ ஆகிடுவார் என்றும் அந்த ஜோதிடர் கணித்துள்ளார். ஜோதிடரின் இந்த கணிப்பு நிஜமாகுமா என்பதை பொருத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.