நயன்தாராவை தொடர்ந்து பிக்பாஸ் பிரபலத்துக்கு ஹீரோயின் சான்ஸ் கொடுத்த ஆர்.ஜே.பாலாஜி - அடடே இந்த நடிகையா?

Ganesh A   | Asianet News
Published : Jan 16, 2022, 02:44 PM IST
நயன்தாராவை தொடர்ந்து பிக்பாஸ் பிரபலத்துக்கு ஹீரோயின் சான்ஸ் கொடுத்த ஆர்.ஜே.பாலாஜி - அடடே இந்த நடிகையா?

சுருக்கம்

ஆர்.ஜே.பாலாஜி இயக்கி உள்ள  ‘வீட்ல விசேஷங்க’ என்கிற திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து தற்போது பின்னணி பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

கோலிவுட்டில் சமீபகாலமாக மற்ற மொழிகளில், சூப்பர் ஹிட் வெற்றி பெற்ற படங்களை ரீமேக் செய்வதில் இயக்குனர்கள் மற்றும் தயாரிப்பாளர்கள் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர். அவ்வாறு ரீமேக் செய்யப்படும் சில படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெறுகின்றது. 

அந்தவகையில், பாலிவுட்டில் கடந்த 2018 ஆம் ஆண்டு ஆயுஷ்மான் குர்ரானா நடிப்பில் வெளியான 'பாதாய் ஹோ' என்கிற காமெடி படத்தை தற்போது தமிழில் ரீமேக் செய்துள்ளனர். இப்படத்தை ஆர்.ஜே.பாலாஜி இயக்கி உள்ளார். இப்படத்துக்கு ‘வீட்ல விசேஷங்க’ என்று தலைப்பு வைத்துள்ளதாக கூறப்படுகிறது.

ஆர்.ஜே.பாலாஜி ஏற்கனவே மூக்குத்தி அம்மன் படத்தை சரவணனுடன் சேர்ந்து இயக்கி இருந்தார். நயன்தாரா ஹீரோயினாக நடித்திருந்த இப்படம் கடந்த 2020-ம் ஆண்டு நேரடியாக ஓடிடி-யில் வெளியாகி வரவேற்பை பெற்றது.

இதன் பின் அவர் இயக்கியுள்ள ‘வீட்ல விசேஷங்க’ என்கிற திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து தற்போது பின்னணி பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இப்படத்தில் பிக்பாஸ் பிரபலம் சிவானி ஹீரோயினாக நடித்துள்ளது தெரியவந்துள்ளது. இதனை அவரே தனது சமூக வலைதள பதிவு மூலம் உறுதிப்படுத்தி உள்ளார்.

நடிகை சிவானி ஏற்கனவே லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல், விஜய் சேதுபதி, பகத் பாசில் நடிப்பில் உருவாகி வரும் விக்ரம் படத்தில் நடித்து முடித்துள்ளார். அதேபோல் விஜய் சேதுபதி - பொன்ராம் கூட்டணியில் உருவாகும் படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்த இரண்டு படங்களும் இன்னும் ரிலீசாக வில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

பிக்பாஸ் ஜூலியுடன் முதல் முறையாகக் கைகோர்த்த வருங்கால கணவர்: வைரல் கிளிக்ஸ்!
மருமகன் மீது கொலை முயற்சி புகார்: 'கார்த்திகை தீபம் சீரியல் கார்த்திக் அதிரடி கைது!