AK61 Update : போட்றா வெடிய..அடுத்த மாஸுக்கு ரெடியாகிட்டார் AK..வலிமை வெளியாவதற்குள் மும்பை பறந்த அஜித்...

Kanmani P   | Asianet News
Published : Jan 16, 2022, 01:13 PM IST
AK61 Update : போட்றா வெடிய..அடுத்த மாஸுக்கு ரெடியாகிட்டார் AK..வலிமை வெளியாவதற்குள் மும்பை பறந்த அஜித்...

சுருக்கம்

AK61 Update : அஜித் 61 படத்தில் பில்லா, மங்கத்தா, படம் போல வில்லன் கெட்டப்பிலும் ,இரட்டை வேடத்திலும்  அஜித் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் அஜித் திடீரென மும்பை சென்று தயாரிப்பாளர் போனி கபூரை நேரில் சந்தித்துள்ளார். இது குறித்த புகைப்படம் வைரலாகி வருகிறது.   

தல அஜித்தின் வலிமை படம் கடந்த இரண்டு ஆண்டுகளாகவே அதிகம் எதிர்பார்ப்புகளை கொடுத்த படமாகும். இந்த படத்தின் அப்டேட்டை வெளியிட வேண்டும் என அஜித் ரசிகர்கள் பெரிய போராட்டத்தையே செய்து விட்டனர். 

வலிமை படபிடிப்பு முழுதும்  சில மாதங்களுக்கு முன் நிறைவு செய்யப்பட்டது. இதனால் விஸ்வாசம் - பேட்ட போன்று ரஜினி படமும், அஜித் படமும் தீபாவளிக்கு மோதும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் தீபாவளிக்கு ரஜினியின் அண்ணாத்த படம் மட்டுமே ரிலீஸ் செய்யப்பட்டது. இந்த ஆண்டுபொங்கலுக்கு வலிமை படம் ரிலீஸ் செய்யப்படும் என தயாரிப்பாளர் போனி கபூர் அறிவித்திருந்தார். ஆனால் திடீரென பரவ துவங்கிய கொரோனா தோற்றால் மீண்டும் வலிமை ரிலீஸ் தள்ளிப்போனது..

இதற்கிடையே நேர்கொண்ட பார்வை" வெற்றியை தொடர்ந்து போனி கபூர்,வினோத்,அஜித் கூட்டணியில் வலிமை உருவாகியது. இதை தொடர்ந்து மூன்றாவது முறையாக AK 61  படமும் இதே கூட்டணியில் அமையவுள்ளது. ஆனால் முதல் மூன்று படங்களுக்கு இசையமைத்த யுவனுக்கு பதிலாக AK 61-ல் அனிரூத் இசையமைக்கவுள்ளதாகவும் சொல்லப்படுகிறது.

வலிமை படத்தின் ரிலீஸ் தேதியே இன்னும் உறுதி செய்யப்படாத போது அஜித்தின் அடுத்த படமான AK 61 அடுத்தாண்டு தீபாவளிக்கு வெளியாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

அஜித் 61 படத்தில் பில்லா, மங்கத்தா, படம் போல வில்லன் கெட்டப்பிலும் ,இரட்டை வேடத்திலும்  அஜித் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் அஜித் திடீரென மும்பை சென்று தயாரிப்பாளர் போனி கபூரை நேரில் சந்தித்துள்ளார். இது குறித்த புகைப்படம் வைரலாகி வருகிறது.

 

 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

டபுள் கேம் ஆடும் கம்ருதீன், பாரு மற்றும் அரோரா; மூவரின் செயலால் கொந்தளிக்கும் நெட்டிசன்கள்!
பாதி உண்மைக்கே வீட்டை விட்டு விரட்டப்படும் தங்கமயில், மீதியும் தெரிந்தால்… என்ன நடக்கும்?