
ரிலீசுக்கு முன்னர் பல்வேறு தடைகளை சந்தித்த மாநாடு, அதன் வெற்றியால் அவை அனைத்தையும் தவிடுபொடி ஆக்கியது. சிம்புவின் ரசிகர்களும், திரையுலக பிரபலங்களும் இப்படத்தை கொண்டாடினர். தற்போது 50 நாட்களை கடந்து இப்படம் வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடி வருகிறது.
தமிழில் பிளாக்பஸ்டர் வெற்றியை ருசித்த மாநாடு திரைப்படம், அடுத்ததாக தெலுங்கு, இந்தி போன்ற மொழிகளிலும் ரீமேக் செய்யப்பட உள்ளது. இப்படத்தின் ரீமேக் உரிமையை நடிகர் ராணாவின் தந்தை கைப்பற்றி உள்ளார்.
அதோடு மாநாடு படம் நார்வேயில் நடந்த தமிழ் திரைப்பட விழாவில், போட்டி பிரிவில் திரையிடப்பட்டது. அதில் சிறந்த இயக்குனருக்கான விருதை வெங்கட் பிரபுவும், சிறந்த வில்லனுக்கான விருதை நடிகர் எஸ்.ஜே.சூர்யாவும், சிறந்த இசையமைப்பாளருக்கான விருதை யுவன் சங்கர் ராஜாவும், சிறந்த படதொகுப்பாளருக்கான விருதை பிரவீன் கே.எல்.லும் வென்றுள்ளார்கள்.
இந்நிலையில் மாநாடு படம் பார்த்து விட்டு வந்த ஒருவரின் பேட்டியை வெங்கட் பிரபுவின் தம்பி ஸ்மைலியுடன் பகிர்ந்துள்ளார். அந்த வீடியோவில் இந்த வருடத்திலேயே எனக்கு பிடிக்காத படம் என்றால் மாநாடு தான்.. ஒன்றுமே புரியவில்லை.. தலை வழி வந்துவிட்டது. அதனால் பாதியிலேயே வீடு திரும்பியதாக அந்த நபர் கூறுகிறார்.. இந்த வீடியோவை பிரேம் ஜி.. சிரிப்பு குறியீடுடன் வெளியிட்டுள்ளார்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.