’என்.ஜி.கே’,‘தேவி 2’இவ்வளவு பாடாவதின்னு தெரிஞ்சிருந்தா அவசரப்பட்டிருக்கமாட்டோமே பாஸ்...புலம்பும் தமிழ்ராக்கர்ஸ்...

Published : Jun 01, 2019, 06:21 PM IST
’என்.ஜி.கே’,‘தேவி 2’இவ்வளவு பாடாவதின்னு தெரிஞ்சிருந்தா அவசரப்பட்டிருக்கமாட்டோமே பாஸ்...புலம்பும் தமிழ்ராக்கர்ஸ்...

சுருக்கம்

நேற்று ரிலீஸான சூர்யா, செல்வராகவன் கூட்டணியின் ‘என்.ஜி.கே’, பிரபு தேவா, தமன்னாவின் ‘தேவி 2’ ஆகிய இரு படங்களும் பாக்ஸ் ஆபிசில் படு தோல்வியைச் சந்தித்துள்ள நிலையில், அவ்விரு படங்களையுமே தமிழ் ராக்கன்ஸ் இணையதளம் கடமை வீரன் கந்தசாமி போல் துல்லியமான டிஜிட்டல் பிரிண்டில் வெளியிட்டு தயாரிப்பாளர்களின் வயிற்றெரிச்சலை வாரிக்கட்டிக்கொண்டுள்ளது.

ட்ரீம் வாரியர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் ஒன்றரை வருடங்களுக்கும் மேல் தயாரிப்பில் இருந்த படம் என்.ஜி.கே. ‘படம் முடியிறதுக்குள்ள ஒரே ஒரு நல்ல சீனாவது வந்துராதான்னு ஏங்கிப்போயிட்டோம். ஆனா கடைசிவரை அப்படி ஒரு சீன் கூட வரலை’ என்று சூர்யா ரசிகர்களைப் புலம்பவைத்த படம். ஆனால் டைரக்டர் செல்வராகவனோ இன்னும் பிடிவாதமாக படத்தில் பல ரகசியங்கள் புதைந்து கிடக்கின்றன. திரைரை ரசிகன் இன்னும் நெருங்கும்போது அந்த ரகசியங்கள் மெல்ல வெளிப்படும்’என்று உதார் விட்டுக்கொண்டிருக்கிறார்.

அந்த ரகசியத்தைத் தெரிந்துகொள்ளும் அதீத ஆர்வத்திலோ என்னவோ தமிழ் ராக்கன்ஸ் ஒரு தரமான டிஜிட்டல் பிரிண்டில் படத்தை நேற்று இரவே வெளியிட்டுவிட்டார்கள். இன்னொரு கொடுமைப் படமான ‘தேவி 2’வில் பிரபுதேவா, தமன்னா, கோவை சரளா கோஷ்டிகளை வைத்துக்கொண்டு இயக்குநர் ஏ.எல்.விஜய் அடித்த கூத்துக்களை சகித்துக்கொள்ள முடியாமல் தியேட்டரில் ஒரு ரசிகர் அடித்த கமெண்ட், ‘டேய் மாப்ள இந்தப் படத்தை தமிழ் ராக்கர்ஸ்ல கூட பாக்கமுடியாது’என்பது. சென்னை ரசிகனின் குரல் அவனுகளுக்கு எப்படிக் கேட்கும். விபரீதம் புரியாமல் ‘தேவி 2’ படத்தையும் நேற்றே தமிழ் ராக்கர்ஸில் வெளியிட்டுவிட்டார்கள்.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

புருஷனை கைக்குள்ள போட இதான் வழி! - மீனா கொடுத்த ஐடியாவை எக்ஸிகியூட் பண்ணும் கோமதி; பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 புரோமோ!
திறமையை விட 'ஃபாலோயர்ஸ்' தான் முக்கியமா? உண்மையை வெளிப்படையாக பகிர்ந்த நடிகர்!