
பிரபல மாடல் ஆக்குகிறேன் என்கிற பெயரில் பெண்களைத் தவறான பாதைக்கு அழைத்துச் செல்வதாகக் குற்றம் சாட்டி நடிகை மீரா மிதுனுக்கு வழங்கப்பட்ட மிஸ் சவுத் இந்திய அழகி பட்டம் பறிக்கப்படுவதாக அப்பரிசை வழங்கிய அமைப்பு அறிவித்துள்ளது. அவர் தற்போது சிங்கப்பூரில் இருப்பதால் இன்னும் மூன்று தினங்களில் அப்பட்டம் பறிக்கப்படும், அவருக்கு அடுத்து இரண்டாவது இடம் பிடித்தவர் மிஸ் சவுத் இந்தியாவாக அறிவிக்கப்படுவார் என்றும் தெரிகிறது.
நடிகை மீரா மிதுன். இதற்கு முன் அவ்வளவாக அறியப்படாத இந்த மஞ்சக் காட்டு மைனாதான் கடந்த 3 தினங்களாக ஊடகங்களின் ஹாட் டாபிக். தமிழ் சினிமாவில் ‘8 தோட்டாக்கள்’,’விக்னேஷ் சிவன், சூர்யா கூட்டணியின் ‘தானா சேர்ந்த கூட்டம்’ ஆகிய இரு படங்களில் மட்டுமே நடித்தவர் ஏனோ சோர்ந்துபோய் சினிமாவை விட்டு ஒதுங்கிவிட்டார்.
இந்நிலையில்,நேற்று முன் தினம் கமிஷனர் அலுவலகத்துக்கு வந்த அவர், தான் 2015, 16ம் ஆண்டுகளில் முறையே மிஸ் சவுத் இந்தியா, மிஸ் சென்னை பட்டம் பெற்றவர் என்றும் வடபழனியில் உள்ள நட்சத்திர ஓட்டல் ஒன்றில் ஜூன் 3ம் தேதியன்று தான் நடத்தவிருக்கும் அழகிப்போட்டியை நடத்தவிடாமல் விடாமல் தனது தொழில் போட்டியாளர்கள் சதி செய்வதாகவும், தனது வலைதளக் கணக்குகளை ஹேக் பண்ணி அந்தரங்க ரகசியங்களை வெளியிடப்போவதாக மிரட்டுவதாகவும் நீண்ட புகார் கொடுத்திருந்தார்.
இந்நிலையில் தனது அழகிப் பட்டத்தைத் தவறான செயல்களுக்குப் பயன்படுத்துகிறார் என்று நூற்றுக்கும் மேற்பட்ட பெண்களிடமிருந்து புகார்கள் வந்துகொண்டேயிருப்பதால் மீரா மிதுனிடமிருந்து அவருக்கு வழங்கப்பட்ட ‘மிஸ் சென்னை’,’மிஸ் சவுத் இந்தியா’ஆகிய இரு பட்டங்களும் பறிக்கப்படுவதாகவும் அவர் இனி அழகியாக நீடிக்க [?]மாட்டார் என்றும் அப்பட்டங்களை வழங்கிய அமைப்பு அறிவித்துள்ளது.
தவறான செயல்களுக்காக மீரா மிதுன் பிரபலமாகிவரும் நிலையில் அவருடன் உதயநிதி ஸ்டாலினும், காம்பவுண்ட் சுவர் மன்னன் விஷாலும் உடன் நிற்கும் புகைப்படங்கள் வைரலாக ஆரம்பித்துள்ளன.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.