மன உளைச்சலை வெளிப்படுத்த முடியாமல் தவித்த ஆர்யா! மோசடி புகார் குறித்து போட்ட உணர்வு பூர்வமான பதிவு!

By manimegalai aFirst Published Aug 25, 2021, 12:09 PM IST
Highlights

நடிகர் ஆர்யா பெயரை சொல்லி மோசடி செய்த இருவரை போலீசார் நேற்று கைது செய்த நிலையில், இதுகுறித்து முதல் முறையாக நடிகர் ஆர்யா, உணர்வு பூர்வமான பதிவை பதிவிட்டுள்ளார்.
 

நடிகர் ஆர்யா பெயரை சொல்லி மோசடி செய்த இருவரை போலீசார் நேற்று கைது செய்த நிலையில், இதுகுறித்து முதல் முறையாக நடிகர் ஆர்யா, உணர்வு பூர்வமான பதிவை பதிவிட்டுள்ளார்.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் ஆர்யா, ஜெர்மனி நாட்டைச் சேர்ந்த இலங்கை தமிழ் பெண் ஒருவரை திருமணம் செய்து கொள்வதாக கூறி ரூபாய் 71 லட்சம் பணம் பறித்துக் கொண்டு, பின்னர் தன்னை திருமணம் செய்து கொள்ளவில்லை என ஆர்யா மீது விட்ஜா என்ற பெண் சிபிசிஐடி-யிடம் ஆன்லைன் மூலம், புகார் கொடுத்தார். இந்த சம்பவம் தமிழ் சினிமா ரசிகர்கள், மற்றும் பிரபலங்கள் மத்தியில்  பரபரப்பை ஏற்படுத்தியது.

மேலும் நடிகர் ஆர்யாவிடம் இது குறித்து சமூக வலைதளத்தில் பலர் கேள்வி எழுப்பிய போதும், அதற்கு ஆர்யா தொடர்ந்து மௌனம் காத்து வந்தார். பின்னர் விட்ஜா இது குறித்து வழக்கு தொடர்ந்தார். இதுதொடர்பாக நடிகர் ஆர்யாவுக்கு சம்மன் அனுப்பப்பட்டு, போலீசார் அவரிடம் விசாரணை நடத்தினர். அந்த விசாரணையின் போது தான் பணம் பெற்று ஏமாற்றியதாக கூறும் விட்ஜா என்ற பெண் யார் என்றே... தனக்கு தெரியாது என்றும், அந்தப் பெண்ணை யாரோ திட்டமிட்டு தன்னுடைய பெயரை கூறி ஏமாற்றி உள்ளனர். எனவே அவர்களை கண்டுபிடிக்க வேண்டும் என ஆர்யா கூறியுள்ளார். விசாரணை முடிந்து வெளியே வந்த ஆர்யா ஆர்யாவிடம் செய்தியாளர்கள் செய்தி சேகரிக்க சென்ற போதும் அதை தவிர்த்துவிட்டு காரில் ஏறி சென்று விட்டார்.

இந்நிலையில் இந்த சம்பவம் அரங்கேறி சில வாரங்கள் ஆகும் நிலையில் ஆர்யாவின் பெயரைக் கூறி ஏமாற்றிய இருவரை போலீசார் தற்போது கைது செய்துள்ளனர். ஜெர்மனியைச் சேர்ந்த விட்ஜாவிடம் ஆர்யா என்று தன்னை அறிமுகப்படுத்திக் கொண்ட புளியந்தோப் பை சேர்ந்த முகமது அர்மான் என்பவர் அவரிடம் காதல் வசனங்களை பேசி மெல்ல மெல்ல 71 லட்சம் பணம் பறித்துள்ளார். இதற்கு உடந்தையாக அவருடைய மைத்துனர் இருந்துள்ளார்.  எனவே இவர்கள் இருவரையும் நேற்று போலீசார் ராணிப்பேட்டை, பெரும்புலிபாக்கத்தில் வைத்து கைது செய்தனர்.

மேலும் அவர்களிடம் இருந்த விலை உயர்ந்த செல்போன், லேப்டாப், ஐபேக் போன்றவையும் கைப்பற்றப்பட்டது. தற்போது நீதிமன்ற காவலில் உள்ள அவர்களிடம் தொடர்ந்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். இந்நிலையில் இதுவரை இந்த மோசடி புகார் குறித்து ஒரு வார்த்தை கூட பேசாமல் இருந்த ஆர்யா, முதல் முறையாக தன்மீதான குற்றம் நீங்கிய பின்னர் வாய் திறந்துள்ளார்.

இதுகுறித்து ஆர்யா தன்னுடைய சமூக வலைத்தள பக்கத்தில் போட்டுள்ள பதிவில், "சென்னை காவல் ஆணையர் மற்றும் மத்திய குற்றப்பிரிவு கூடுதல் ஆணையர் மற்றும் சைபர் கிரைம் போலீசார் ஆகியோர் உண்மை குற்றவாளிகளை கண்டறிந்து கைது செய்வதற்கு தன்னுடைய நன்றிகள்.  இது தன்னால் வெளிப்படுத்த முடியாத மன உளைச்சலாக இருந்தது என்றும், தன்னை நம்பியவர்கள் அனைவருக்கும் நன்றி என உணர்வு பூர்வமாக கூறியுள்ளார். 

 

click me!