நடிக்க வாய்ப்புகள் இல்லை...! அதிரடியாக தொழிலை மாற்றிய ஆர்யா பட நடிகை...!

 
Published : May 05, 2018, 07:39 PM ISTUpdated : Sep 19, 2018, 02:20 AM IST
நடிக்க வாய்ப்புகள் இல்லை...! அதிரடியாக தொழிலை மாற்றிய ஆர்யா பட நடிகை...!

சுருக்கம்

arya movie actress turn to direction and producer

ஆரியா நடித்த கலாபக்காதலன், விஜயகாந்த் நடித்த  “ எங்கள் ஆசான், டாக்டர் கலைஞர் கதை, வசனம் எழுதிய உளியின் ஓசை, போன்ற படங்களில் நடித்தவர் நடிகை அக்ஷயா. 

இவர் சில படங்களில் மட்டுமே நடித்திருந்தாலும், பெரிதாக ரசிகர்களால் கவனிக்க படாத நடிகையாகவே இருந்தார். இதனால் இவருக்கு படங்களில் நடிக்க வாய்புகள் கிடைக்கவில்லை. இதனால் தற்போது அதிரடியாக தன்னுடைய கவனத்தை இயக்கம், தயாரிப்பு ஆகியவற்றில் திசை திருப்பியுள்ளார். மேலும் இந்த படத்தில் இவர் கதாநாயகியாகவும் நடித்துள்ளார்.

இந்த திரைப்படம் பற்றி இயக்குனரும், நாயகியுமான அக்ஷயா கூறியதாவது..

பெண் இயக்குனர்களுக்கு தமிழ் சினிமாவில் எப்போது நல்ல வரவேற்பு இருக்கும் அந்த வரிசையில் நாம் இணைந்துள்ளேன்.  இது ஒரு ரொமான்டிக், திரில்லர் படமாக உருவாக்கி இருக்கிறோம். மும்பை பின்னணியில் நடக்கும் கதை.                                    

முக்கியமான மூன்று கதாபாத்திரங்களை சுற்றி திரைக்கதை நகரும். நாயகி ஜனனி அக்ஷயா ,நாயகன்தமன் இருவரும் காதலிக்கிறார்கள். ஆனால் இவர்களுக்கு தொடர்பு இல்லாத பாலா அர்ஜுன் என்ற கதாபாத்திரம் ஜனனியை பின்தொடர்கிறார். யார் அவர் எதற்காக ஜனனியை பின் தொடர்கிறார், அந்த நேரத்தில் மும்பையில் தொடர் கொலை சம்பவங்கள் வேறு  நடக்கின்றன. அந்த கொலை சம்பவங்களுக்கும் இந்த மூன்று கதாபாத்திரத்திரங்களுக்கும் என்ன தொடர்பு இறுதியில் ஜனனி என்ன ஆனார் என்பதுதான் படத்தின் கிளைமாக்ஸ்.விறு விருப்பான திரைக்கதை ரசிக்கும்படியாக இருக்கும்.

படப்பிடிப்பு மும்பை, மலேசியா,சென்னை போன்ற இடங்களில் நடைபெற்றது, ஜூன் மாதம் இசை வெளியீட்டு விழா மிக பிரமாண்டமாக நடைபெற உள்ளது. ஜூலை மாதம் படம்  திரைக்கு வர உள்ளது என்கிறார் அக்ஷயா.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

கோடி கோடியாக சம்பாரிச்சலும் கலைஞனுக்கு கை தட்டால் ரொம்ப முக்கியம் - சித்ரா லட்சுமணன்
யாரும் எதிர்பாராத ட்விஸ்ட்... ஆதி குணசேகரனால் ஆபத்தில் சிக்கும் ஜனனி - எதிர்நீச்சல் சீரியலில் அடுத்த அதிரடி