
அவன் அவனுக்கு ஒரு பொண்ணு கெடைக்கவே இங்க நாக்கு தள்ளுது ஆனா, இந்த ஆர்யாவுக்கு பாருங்க எங்கயோ மச்சம் இருக்குது இவர கல்யாணம் பண்ணிக்க எத்தனை பெண்கள் அப்ளிகேஷன் போட்டுருக்கங்கன்னு தெரியுமா?
உள்ளம் கேட்க்குமே படத்தில் சாக்லேட் பாயாக அறிமுகமான இந்த நடிகர் ஆர்யா, பெரிதாக எல்லோருக்கும் தெரியவில்லை, இதனையடுத்து அழுக்கு ஆணழகனாக, முரட்டு பையனாக ‘அறிந்தும் அறியாமலும்’ படத்தில் வெளியில் வந்தார்.
கொஞ்சம் நாட்கள் போணியாகாமல் இருந்த இவர் “நான் கடவுள், அவன் இவன், வேட்டை, ராஜாராணி ஹிட் ஸ்டாராக கலக்கினார். 37 வயதாகும் ஆர்யாவிற்கு ராஜா ராணி தான் சாக்லேட் பாயாகவும், பெண்களின் காதல் மன்னனாகவும் கவர்ந்தார். கடந்த சில வருடங்களாக முன்னணி நடிகைகளுடன் இணைத்து கிசுகிசுக்கள் வந்தன.
ஆனாலும் கொஞ்சமும் பீத்திக்காத இந்த லவ்வர் பாய் தனக்கு பெண் பார்ப்பதாகவும் திருமணம் செய்துகொள்ள விருப்பம் உள்ள பெண்கள் விண்ணப்பிக்கலாம் என்றும் வீடியோவில் பேசி சமூக வலைத்தளத்தில் வெளியிட்டார்.
இந்த வீடியோவில், திருமணம் செய்துகொள்ள விரும்பும் பெண்கள் தங்களை பற்றிய பெயர், படிப்பு, குடும்ப விவரங்களை தெரிவிக்கும்படி ஒரு டெலிபோன் நம்பரையும் போட்டிருந்தார்.
இதன் மூலம் ஆர்யாவை திருமணம் செய்துகொள்ள விருப்பம் தெரிவித்து 7 ஆயிரம் பெண்கள் விண்ணப்பித்து இருப்பதாக தகவல் வெளியானது. இந்த தகவலால் கல்யாணம் பண்ணிக்க பொண்ணு கிடைக்காத விரக்தியில் கிடக்கும் பசங்க வயிற்றிச்சலை உண்டாக்கியிருக்கிறார் இந்த ப்ளே பாய்.
இதுல என்ன விசேஷம்னா? 18 பெண்கள் தேர்வு செய்யப்பட்டு உள்ளனர். இந்த 18 பேரில் இருந்து தனக்கு பொருத்தமான மணமகளை ஆர்யா தேர்வு செய்கிறார். தனியார் டெலிவிஷன் நிகழ்ச்சி மூலமாக மணமகளை அவர் தேர்ந்தெடுக்க போறாராம். எனவே விரைவில் ஆர்யா திருமணம் நடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதனையடுத்து நம்ம சண்டக்கோழி நடிகர் அதாங்க விஷாலும் திருமணத்துக்கு தயாராகிறார். ஆர்யா திருமணம் முடிந்ததும் எனது திருமணம் நடக்கும் என்று அவர் கூறியுள்ளார். இருவரது திருமணமும் இந்த வருடத்திலேயே நடக்கும் என தகவல் கசிந்துள்ளது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.