
சில நாட்களுக்கு முன் சமூக வலைத்தளத்தில் கலக்கிய ஒரு விஷயம் தெய்வமகள் சீரியல் பிரகாஷின் ஒட்டு தாடிதான்.
ஜவ்வு மிட்டாய்
இழு இழு என்று ஜவ்வு மிட்டாய் போன்று இழுத்துக்கொண்டிருந்த தெய்வமகள் சீரியல் ஒரு வழியாக கடைசி வாரத்துடன் முடிவடைந்தது.
அண்ணி
அதில் அண்ணியாக வந்து பாடாய் படுத்தி கொண்டிருந்த காயத்ரியை கதையின் நாயகனான பிரகாஷ் சுட்டு கொன்றார்.
சோகம்
அப்போது பிரகாஷ் ஒரு ஒட்டு தாடியுடன் சோகமாக வலம் வந்தார்.அதை வைத்து நெட்டிசன்கள் கலாய்த்து தள்ளி விட்டனர்.தாடிக்குள்ள மரியாதையே போச்சு அப்படி இப்படி என்று மீம்ஸ் போட்டு தாக்கி விட்டனர்.
வாணி போஜன்
சமூக வலைத்தளத்தில் ட்ரெண்ட் ஆன பிரகாஷின் தாடி பற்றி பிரகாஷின் ரீல் நாயகி சத்யா( வாணி போஜன்) கூறியதாவது.
அந்த தாடி ஒட்டும் போதே நாங்கள் விழுந்து விழுந்து சிரித்தோம்.செம்மயா உங்களை கலாய்க்க போறாங்க என்று கூட சொன்னேன்.அதை விட என் அம்மா ஏண்டி தாடியை இப்படி ஒட்டி வச்சிங்க என்று சிரித்தார்கள் என வாணி போஜன் கூறியுள்ளார்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.