
நடிகர் ஆர்யா, மற்றும் சாயிஷா கடந்த வருடம் திருமணம் செய்துகொண்ட நிலையில், நேற்றைய தினம் மார்ச் 10 ஆம் தேதி, தங்களுடைய முதல் வருட திருமண நாளை கொண்டாடினர். நடிகர் ஆர்யா முதல் திருமண கொண்டாட்டத்தின் போது மனைவி சயிஷாவுடன் எடுத்து கொண்ட புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.
நடிகர் ஆர்யாவும், சாயிஷாவும் முதல்முறையாக, 'கஜினிகாத்' படத்தில் இணைந்து நடித்தபோது, இருவருக்கும் இடையே காதல் மலர்ந்தது. பின் இருவரும் பெற்றோரின் சம்மதத்துடன், கடந்த 2019ஆம் ஆண்டு மார்ச் 10 ஆம் தேதி அன்று திருமணம் செய்து கொண்டனர்.
ஹைதராபாத்தில் நடந்த இவர்களுடைய திருமணத்தில், நெருங்கிய நண்பர்கள் மற்றும் குடும்பத்தினர் மட்டுமே கலந்து கொண்டனர். பின்னர் இவர்களது திருமண வரவேற்பு சென்னையில் நடைபெற்றது.
இந்நிலையில் சாயிஷா திருமணத்திற்கு பின்பும் தொடர்ந்து திரைப்படங்களில் நடித்து வருகிறார். இவர்கள் இருவரும் ஏற்கனவே 'காப்பான்' படத்தில் இணைந்து நடித்த நிலையில், தற்போது 'டெடி' படத்தில் நடித்துள்ளனர்.
சக்தி சௌந்தர்ராஜன் இயக்கியுள்ள இந்த படத்தை, ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் தயாரித்துள்ளது. கோடை விடுமுறையை முன்னிட்டு இப்படம் வெளியாக உள்ளது. இந்நிலையில் நேற்று சாயிஷா தங்களுடைய முதல் திருமண ஆண்டு பற்றி மிகவும் உருக்கமாக ஒரு பதிவை பதிவிட்டுள்ளார். அதில்... "இனிய திருமண நாள் வாழ்த்துக்கள், முடிந்தவரை எல்லா வழிகளிலும் என்னை நிறைவு செய்த மனிதர் நீங்கள். நீங்கள் இல்லாத வாழ்க்கையை கற்பனை செய்ய முடியாது. அன்பு, உற்சாகம், தோழமை என அனைத்தும் ஒரே நேரத்தில் கிடைத்தது நான் உன்னை நேசிக்கிறேன். என கூறியிருந்தார்.
இதை தொடர்ந்து இருவரும் திருமண வருடத்தை கொண்டாடி மகிழ்ந்த மிகவும் ரொமான்டிக்கான புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படம் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.