இப்போதைக்கு நாயகி பட்டியலில் நயன்தாரா பெயர் அடிபடும் நிலையில் அப்படத்தில் அஜீத் கேரக்டருக்கு அடுத்தபடியாக மிக முக்கியத்துவம் உள்ள ஒரு கேரக்டரில் நடிக்க படக்குழு அரவிந்த்சாமியை அணுகினார்களாம். ஆனால் படத்தின் கதை தனது கேரக்டர் உட்பட எதையுமே கேட்கக்கூட நேரம் ஒதுக்காத அர்விந்தசாமி முதல் அழைப்பு வந்த போனிலேயே தனது மறுப்பைத் தெரிவித்துவிட்டாராம்.
மிக விரைவில் படப்பிடிப்பு துவங்க உள்ள அஜீத்தின் ‘வலிமை’படத்தில் ஒரு முக்கியமான கேரக்டரில் நடிக்க நடிகர் அரவிந்தசாமிக்கு அழைப்பு வந்ததாகவும் அதில் தனது கேரக்டர் என்ன என்று கூட கேட்காமல் அரவிந்த்சாமி மறுத்துவிட்டதாகவும் நம்பகமான தகவல்கள் நடமாடுகின்றன.
டிசம்பரிம் படப்பிடிப்பு தொடங்கவிருக்கும் அஜீத், ஹெச்.வினோத், போனிகபூர் கூட்டணியின் ‘வலிமை’படத்துக்கு கதாநாயகி உள்ளிட்ட கேரக்டர்களுக்கு நட்சத்திரங்களை கமிட் செய்யும் பணி பரபரப்பாக நடந்து வருகிறது. இப்போதைக்கு நாயகி பட்டியலில் நயன்தாரா பெயர் அடிபடும் நிலையில் அப்படத்தில் அஜீத் கேரக்டருக்கு அடுத்தபடியாக மிக முக்கியத்துவம் உள்ள ஒரு கேரக்டரில் நடிக்க படக்குழு அரவிந்த்சாமியை அணுகினார்களாம். ஆனால் படத்தின் கதை தனது கேரக்டர் உட்பட எதையுமே கேட்கக்கூட நேரம் ஒதுக்காத அர்விந்தசாமி முதல் அழைப்பு வந்த போனிலேயே தனது மறுப்பைத் தெரிவித்துவிட்டாராம்.
ஏ.எல்.விஜயின் ‘தலைவி’படத்தில் எம்.ஜி,ஆர். கேரக்டரில் நடித்துவரும் அரவிந்த்சாமி அந்த கெட் அப்பை இப்போதைக்கு மாற்ரிக்கொள்ள முடியாது என்ற காரணம் ஒரு பக்கமிருக்க, பிரபல இந்திப்பட இயக்குநர் நீரஜ் பாண்டேவின் படம் ஒன்றில் நடிக்க ஆறு மாதங்களுக்கு கால்ஷீட் கொடுத்திருப்பதும் அஜீத் படத்தை நிராகரிக்கக் காரணங்கள் என்று சொல்லப்படுகிறது.