தனி அறையை ரெடி பண்ணிட்டு கூப்பிடு..!! போலீஸ் கமிஷ்னர் அலுவலகத்தில் அறை நிர்வாண நடிகையின் அதிர்ச்சி பேச்சு..!!

By Ezhilarasan BabuFirst Published Nov 22, 2019, 10:47 AM IST
Highlights

பிறகு கமிஷனர் அலுவலகம் வந்த அவரிடத்தில்,  செய்தியாளர்கள் புகார்  குறித்து பேட்டி அளிக்கும்படி கேட்டுள்ளனர்.  ஆனால் மீரா மிதுன் நான் விஐபி கேட்டகிரியில் இருப்பதால் கமிஷனர் அலுவலக மரத்தடி நிழலில் எல்லாம் நின்று என்னால் பேட்டி கொடுக்க முடியாது.  இருக்கை வசதியுடன் கூடிய தனி அறை ஒன்றை ஏற்பாடு செய்யுங்கள் என கூறியுள்ளார்.  ஆனால் கமிஷனர் அலுவலக நடைமுறைகள் குறித்து தெரிவிக்க டிவி செய்தியாளர்கள் முயற்சி செய்தும்,  அதை மீராமிதுன் பொருட்படுத்தாமல் ஏகவசனத்தில் பேசிவிட்டு கமிஷனர் அலுவலக பின்பக்க வாசல் வழியாக வெளியேறியுள்ளார்.  

மரத்தடியில் நிழலில் எல்லாம் நின்று  என்னால் பேட்டி கொடுக்க முடியாது, தனி அறையை ரெடி செய்துவிட்டு சொல்லுங்கள் பிறகு வந்து பேசுகிறேன் என சென்னை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் உள்ள செய்தியாளர்களிடம் மீரா மிதுன் கண்டிப்பு காட்டி இருப்பது சுவாரஸ்யத்தை ஏற்படுத்தி உள்ளது.  சென்னை சேத்துப்பட்டு பகுதியை சேர்ந்தவர் மீரா மிதுன் வயது (31) நடிகையான இவர் சூர்யா நடித்த தானா சேர்ந்த கூட்டம் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.  மாடலிங் தொழிலில் ஈடுபட்டு  வருகிறார். நடிகையாக இருந்தாலும்கூட பிக்பாஸ் நிகழ்ச்சியில் மூலமாகவே இவர் தமிழக மக்களிடத்தில் பிரபலமானார் அந்த நிகழ்ச்சியில் மீரா மிதுன் நடந்து கொண்ட விதம் பலரையும் எரிச்சலடைய செய்தது. 

போட்டியில் இருந்து வெளியேற்றப்பட்ட பிறகும் அவர் மீது பல்வேறு சர்ச்சைகள்  எழுந்தது.  அதாவது தமிழ் பெண்கள் பங்கேற்கும் அழகிப் போட்டி ஒன்றை நடத்த திட்டமிட்டிருந்தார் மீரா மிதுன் இவருக்கும் அதை அழகிப் போட்டிகளை நடத்தி வரும்  ஜோ மைக்கேல் பிரவீன் என்பவருக்கும் இடையே பிரச்சனை ஏற்பட்டு அது மோதலாக  வெடித்தது அது மீராமிதுனின் உண்மையான முகத்தை வெளி உலகுக்கு காட்டியது.  இந்நிலையில் ஜோ மைக்கேல் பிரவீன்,  தனக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக கூறி மீரா மிதுன்.  எழும்பூர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார்.  இதனையடுத்து எழும்பூரில் உள்ள ஓட்டல் ஒன்றில் அவர் செய்தியாளர்களை சந்தித்த போது போலீசாரை தரக்குறைவாக பேசியது தொடர்பாக மீரா மிதுன் மீது எழும்பூர் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.  அதேநேரத்தில் ஓட்டல் ஊழியருக்கு கொலை மிரட்டல் விடுத்தார் என்பதற்காக அவர் மீது கொலை மிரட்டல் வழக்கும் பதிவு செய்யப்பட்டுள்ளது.  இப்படி பல்வேறு சட்ட சர்ச்சைகளில் சிக்கி அதிர்ச்சி மேல் அதிர்ச்சி கொடுத்து வரும் மீரா மிதுன்,  சிலர் மீது புகார் அளிக்க வேப்பேரியில் உள்ள போலீஸ் கமிஷனர் அலுவலகத்திற்கு வரப்போவதாக  சில செய்தியாளரிடம் கூறியுள்ளார். 

 பிறகு கமிஷனர் அலுவலகம் வந்த அவரிடத்தில்,  செய்தியாளர்கள் புகார்  குறித்து பேட்டி அளிக்கும்படி கேட்டுள்ளனர்.  ஆனால் மீரா மிதுன் நான் விஐபி கேட்டகிரியில் இருப்பதால் கமிஷனர் அலுவலக மரத்தடி நிழலில் எல்லாம் நின்று என்னால் பேட்டி கொடுக்க முடியாது.  இருக்கை வசதியுடன் கூடிய தனி அறை ஒன்றை ஏற்பாடு செய்யுங்கள் என கூறியுள்ளார்.  ஆனால் கமிஷனர் அலுவலக நடைமுறைகள் குறித்து தெரிவிக்க டிவி செய்தியாளர்கள் முயற்சி செய்தும்,  அதை மீராமிதுன் பொருட்படுத்தாமல் ஏகவசனத்தில் பேசிவிட்டு கமிஷனர் அலுவலக பின்பக்க வாசல் வழியாக வெளியேறியுள்ளார்.  அவர் செய்தியாளர் இடத்தில் நடந்து கொண்ட விதம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. 

click me!