திரைப்பட டிஜிட்டல் திருட்டு ..அதிரடியாக களம் இறங்கிய அருண் விஜய்!

Published : Jul 18, 2022, 06:15 PM IST
திரைப்பட டிஜிட்டல் திருட்டு ..அதிரடியாக களம் இறங்கிய அருண் விஜய்!

சுருக்கம்

டிஜிட்டல் திருட்டு என்பது பரபரப்பான விவாதத்தில் இருக்கும் நிலையில் இந்த தொடர் வரவேற்பு பெரும் என தயாரிப்பு நிறுவனம் எதிர்பார்த்து வருகிறது.


சாமி, ஆறு, சிங்கம் சீரிஸ்,சாமி ஸ்கொயர் என அதிரடி படங்களை கொடுத்தவர் இயக்குனர் ஹரி. சூர்யா - ஹரி கூட்டணியில் உருவான சிங்கம் 3 பாகங்களும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து பாராட்டுகளை பெற்றது இதையடுத்து மீண்டும் சூர்யாவுடன் ஹரி கைகோர்ப்பார் என எதிர்பார்க்கப்பட்டது.

முன்னதாக அருவா, யானை  என இரு படங்கள் அறிவிக்கப்பட்டன. இதில் அருவா படத்தில் சூர்யா நடிப்பார் என பெரிதும் எதிர்பார்க்கப்பட்டது. இதற்கான சந்திப்பும் நடந்தது. ஆனால் குறிப்பிடப்படாத காரணங்களால் இதுவரை ஹரியுடன் சூர்யா இணையவில்லை. இதற்கிடையே யானை படத்தை தனது மைத்துனர் அருண் விஜய்யை  வைத்து எடுத்து வெளியிட்டு விட்டார் ஹரி. ஜூலை ஒன்றாம் தேதி வெளியான இந்த படம் கிராமத்து நாயகனின் கதைக்களமாக அமைந்தது. பிரியா பவானி சங்கர் நாயகியாக நடித்த இந்த படத்தில் சமுத்திரகனி முக்கிய வேடத்தில் நடித்திருந்தார். குடும்ப உறவுகள் சார்ந்த கதைகளத்தை கொண்டு வரவேற்பு பெற்றது யானை.

மேலும் செய்திகளுக்கு.. பான் இந்தியா படமாக ஏ கே 61..டோலிவுட் நடிகர்களை களமிறக்கும் படக்குழு!

தொடர்ந்து ஏ.எல் விஜயுடன் புதிய திட்டத்தில் அருண் விஜய் இணைய உள்ளார் என தகவல் பரவி வருகிறது. இந்நிலைகள் அருண் விஜய் தமிழ் ராக்கர்ஸ் என்னும் வெப் சீரிஸில் நடித்து வருகிறார். இதற்கு முன்பு ஈரம், வல்லினம், குற்றம் 23 உள்ளிட்ட படங்களை இயக்கிய அறிவழகன் தான் இந்த சீரிஸையும் இயக்கி வருகிறார். இதன் மூலம் வெப் தொடரில் அறிமுகமாகிறார் அருண் விஜய்.

வரும் ஆகஸ்ட் 23 முதல் ஓடிடித்தளத்தில் ஸ்ட்ரீமிங் செய்யப்பட உள்ள இந்த வெப்சீரிஸ்  ட்ரெய்லர் நேற்று மாலை வெளியானது. சின்ன பட்ஜெட் முதல் பெரிய பட்ஜெட் வரை திரைக்கு வந்த உடனேயே இணையதளத்தில் வெளியிட்டு வருகிறது தமிழ் ராக்கர்ஸ் என்னும் வலைப்பக்கம். சினிமா திருட்டு கும்பலை தடுக்க பல முயற்சிகள் மேற்கொண்டும் இந்த வலைதளத்தை மட்டும் இதுவரை முடக்க இயலவில்லை.

மேலும் செய்திகளுக்கு...பிளாக் அண்ட் ஒயிட்டில் போல்ட் போஸ் கொடுத்த ஷாலினி பாண்டே..வைரல் போட்டோஸ் இதோ! 

 

ஒவ்வொரு முறை பதிவிறக்கம் செய்வதற்கும் தனித்தனி லிங்குகளை இந்த வலைதளம் கொடுத்து வருவதால் இதனை பிடிப்பது சைபர் கிரைமீர்க்கே ஒரு சவாலாக இருப்பதாக கூறப்படுகிறது. போலீஸ் அதிகாரியாக நடிக்கும் அருண் விஜய் திரைப்படம் டிஜிட்டல் திருட்டில் ஈடுபடும் நபர்களை எப்படி பிடிக்க முயல்கிறார் என்பதை இதன் கதை என கூறப்படுகிறது.

மேலும் செய்திகளுக்கு...இந்நாளில் மறைந்த கவிஞர் வாலி... எழுத்துக்களால் சிகரம் படைத்தவரின் வெற்றி வரிகள் !

இதில் ஐஸ்வர்யா மேனன், வாணி போஜன், அழகம்பெருமாள் மற்றும் வினோதினி வைத்தியநாதன் உள்ளிட்டோர்  முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இந்த தொடருக்கான கதையை மனோஜ் குமார் கலைவாணன் எழுதியுள்ளார். டிஜிட்டல் திருட்டு என்பது பரபரப்பான விவாதத்தில் இருக்கும் நிலையில் இந்த தொடர் வரவேற்பு பெரும் என தயாரிப்பு நிறுவனம் எதிர்பார்த்து வருகிறது.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

Read more Articles on
click me!

Recommended Stories

கிரிஷ் விவகாரத்தில் யாரும் எதிர்பார்க்காத முடிவை எடுத்த முத்து.. ஆடிப்போன மீனா - சிறகடிக்க ஆசை சீரியல் அப்டேட்
ஜனனியின் புது பிசினஸுக்கு வந்த சிக்கல்... குடைச்சல் கொடுக்க ரெடியான ஆதி குணசேகரன் - எதிர்நீச்சல் தொடர்கிறது