
மகனை முன்னணி ஹீரோவாக்க துடிக்கும் தந்தை... பிரபல நடிகரை வைத்து பட போஸ்டரை வெளியிட்டு அசத்தல்... அருண் விஜய்க்கு அடிக்குமா லக்...!
என்னதான் சிறப்பாக நடித்தாலும் முன்னணி ஹீரோவாக ஜொலிக்க முடியாமல் தவித்து வந்தார் அருண் விஜய். வயதிலேயே சினிமாவிற்குள் வந்த அருண் விஜய்யின் ஆரம்ப காலங்களில் கதாநாயகனாக மட்டுமே நடித்து வந்தார். அதில் சில படங்கள் மட்டுமே ஹிட் ஆன நிலையில், இறுதியாக பாண்டவர் பூமி படத்தில் நடித்தார். அந்த படம் சூப்பர் ஹிட் ஆனாலும் அருண் விஜய்க்கு சொல்லிக் கொள்ளும் படியாக படம் எதுவும் அமையவில்லை. அதன் பின்னர் நீண்ட இடைவேளைக்குப் பிறகு "என்னை அறிந்தால்" படம் மூலம் அஜித்திற்கு வில்லனாக களம் இறங்கினார். அன்று முதல் சிறப்பான கதைகளை மட்டுமே தேர்வு செய்து நடித்து வருகிறார். சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான குற்றம் 23, தடம், சாஹோ, செக்கச் சிவந்த வானம் ஆகிய படங்கள் சூப்பர் ஹிட் அடிக்க, இப்போது அருண் விஜய் காட்டில் பட மழை கொட்ட ஆரம்பித்துள்ளது.
தற்போது கார்த்திக் நரேன் இயக்கத்தில் அருண் விஜய் நடித்துள்ள "மாஃபியா" படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இதைப் பார்த்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கூட, தன்னை வாழ்த்தியதாக அருண் விஜய் தெரிவித்திருந்தார். மகனை எப்படியாவது முன்னணி ஹீரோவாக்க முடிவு செய்த விஜயகுமார், ஜி.என்.குமரவேலவன் இயக்கத்தில் புதிய படம் தயாரிக்கிறார். அருண் விஜய்யின் 30வது படமான அதற்கு "சினம்" எனப் பெயரிடப்பட்டுள்ளது. இந்த படத்தில் மீண்டும் போலீஸ் ஆபீசராக அருண் விஜய் கலக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
இந்த படத்திற்கான பர்ஸ்ட் லுக் போஸ்டரை தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள நடிகர் கார்த்தி, "படம் வெற்றி பெற வாழ்த்துக்கள் பிரதர்" என வாழ்த்து தெரிவித்துள்ளார். சமீபகாலமாக சிறப்பான கதைகளை மட்டுமே தேர்வு செய்து நடித்து வரும் அருண் விஜய்க்கு இந்தப் படம் சிறப்பான பிளாட் பார்ம் அமைத்து தரும் என்ற எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.