
இந்தப்படம் வரும் நவம்பர் 29-ம் தேதி ரிலீஸ் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து, நீண்ட காலமாக ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருந்த 'சியான்' விக்ரம் - கவுதம் மேனன் கூட்டணியில் உருவாகும் 'துருவ நட்சத்திரம்' படம் குறித்த அப்டேட்டும் வெளியாகியுள்ளது.
முதல்முறையாக கவுதம் மேனன் இயக்கத்தில் விக்ரம் நடிக்கும் இந்தப்படத்தில், ரித்து வர்மா, ஐஸ்வர்யா ராஜேஷ் என டபுள் ஹீரோயின்கள் நடித்துள்ளனர். அவர்களுடன் சிம்ரன், ராதிகா, டிடி மற்றும் பார்த்திபன் உள்ளிட்ட பலர் முக்கிய கேரக்டரில் நடித்துள்ளனர். ஹாரிஸ் ஜெயராஜ் இந்தப் படத்துக்கு இசையமைக்கிறார்.
துருவ நட்சத்திரம் படத்தின் பெரும்பாலான காட்சிகள், துருக்கி, ஜார்ஜியா உள்ளிட்ட வெளிநாடுகளில் படமாக்கப்பட்டுள்ளன. மிக பிரம்மாண்டமாக தயாரிக்கப்படும் இந்தப் படத்தில், விக்ரம் உளவுத்துறை அதிகாரியாக நடித்துள்ளார்.
ஏற்கெனவே, படத்தின் டீசர்கள், டிரைலர்கள் வெளியாகி ரசிகர்களின் வரவேற்பை பெற்றிருந்தது.
விறுவிறுப்பாக உருவாகி வந்த இந்தப்படம், பணச்சிக்கல் காரணமாக பாதியில் நின்றது. பின்னர் ஒருவழியாக படத்தின் ஷுட்டிங்கை கவுதம் மேனன் முடித்தார். இந்தப் படம் ஆரம்பிக்கப்பட்டு கிட்டத்தட்ட 2 ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டதால், துருவ நட்சத்திரம் என்ற படம் தயாராவதையே ரசிகர்கள் மறந்து விட்டனர்.
எனினும், தொடர்ந்து கவுதம் மேனனிடம் இந்தப் படம் ரிலீஸ் தொடர்பான கேள்விகள் எழுப்பப்பட்டு வந்தன.
இந்நிலையில், துருவ நட்சத்திரம் குறித்த மாஸ் அப்டேட்டையும் வெளியிட்டுள்ளார். இதுதொடர்பாக கவுதம் மேனன் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், 'துருவ நட்சத்திரம்' படத்தின் போஸ்ட் ப்ரொடக்ஷன் பணிகள் அடுத்த 60 நாட்களில் முடிந்து, படம் ரிலீசுக்கு தயாராகும் என தெரிவித்துள்ளார்.
அத்துடன், 'சியான்' விக்ரமின் ஸ்டைலிஸ் லுக்குடன் கூடிய புதிய போஸ்டரையும் அவர் வெளியிட்டுள்ளார். இந்த அப்டேட், துருவ நடத்திரம் படத்தை எதிர்பார்த்து காத்திருந்த விக்ரம் ரசிகர்களுக்கு உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.