மீண்டும் மிரட்ட வரும் 'டிமான்ட்டி காலனி 3'! தடபுடலாக பூஜையுடன் துவங்கிய படப்பிடிப்பு!

Published : Jul 07, 2025, 11:25 AM IST
demonte colony 2 review

சுருக்கம்

Demonte Colony 3 : டிமான்ட்டி காலனி' திரைப்படத்தின் மூன்றாம் பாகத்தின் படப்பிடிப்பு, இன்று பூஜையுடன் துவங்கியுள்ளதாக தற்போது தகவல் வெளியாகி உள்ளது.

உண்மை சம்பவம்:

Demonte Colony 3 :ஆக்சன் , ரொமான்டிக், ஃபேண்டஸி, காமெடி, திரில்லர் போன்ற படங்களுக்கு எப்படி தனி ரசிகர்கள் கூட்டம் உள்ளதோ, அதேபோல் ஹாரர் பாணியில் எடுக்கப்படும் திரைப்படங்களுக்கும், தனி ரசிகர்கள் கூட்டம் உள்ளது. அந்த வகையில் கடந்த 2015 ஆம் ஆண்டு, உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டு சுவாரஸ்யத்திற்காக கூடுதல் விஷயங்களை புகுத்தி வெளியான திரைப்படம் தான், 'டிமான்ட்டி காலனி'.

அஜய் ஞானமுத்து:

இந்த படத்தின் மூலம் இயக்குனராக தமிழ் சினிமாவில் தன்னுடைய கரியரை துவங்கியவர் இயக்குனர் அஜய் ஞானமுத்து. இந்த படத்தை தொடர்ந்து, 'இமைக்கா நொடிகள்', 'கோப்ரா' போன்ற படங்களை இயக்கினார். இவர் நடிகர் விக்ரமை வைத்து இயக்கிய, 'கோப்ரா' திரைப்படம் மிகப்பெரிய தோல்வி படமாக அமைந்த நிலையில், கடந்த ஆண்டு 'டிமான்ட்டி காலனி' திரைப்படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்கி வெளியிட்டார்.

டிமான்ட்டி காலனி 2 படத்தின் வெற்றி:

முதல் பாகத்தின் தொடர்ச்சியாக வெளியான இந்த படத்தில், முதல் பாகத்தில் ஹீரோவாக நடித்திருந்த அருள்நிதி ஹீரோவாக நடிக்க, ரமேஷ் திலக், சனந்த் ஆகியோரின் முந்தைய பாகத்தின் காட்சிகளும் இடம்பெற்றிருந்தது. மேலும் 'டிமான்ட்டி காலனி' படத்தின் இரண்டாம் பாகம், முதல் பாகத்தை விட முற்றிலும் வேறுபட்டதாக இருந்தது. இதில் ப்ரியா பவானி சங்கர், அருண் பாண்டியன், மீனாட்சி கோவிந்தராஜன், அர்ச்சனா ரவிச்சந்திரன், எம் எஸ் பாஸ்கர், செந்தி குமாரி உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். இந்த படத்திற்கு ஹரிஷ் கண்ணன் ஒளிப்பதிவு செய்ய, குமரேஷ் என்பவர் படத்தொகுப்பு செய்திருந்தார். சாம் சி எஸ் இசையமைத்திறந்தார்.

'டிமான்ட்டி காலனி 3' பூஜையுடன் துவக்கம்:

இப்படம் சுமார் 15 முதல் 20 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்டு, ரூ. 85 கோடி வரை வசூல் சாதனை செய்தது. இதை தொடர்ந்து இப்படத்தின் மூன்றாம் பாகம் எடுக்கப்படும் என ஏற்கனவே அஜய் ஞானமுத்து அறிவித்திருந்த நிலையில், தற்போது அதன் தொடர்ச்சியாக 'டிமான்ட்டி காலனி 3' திரைப்படத்தின் மூன்றாம் பாகத்திற்கான பூஜை இன்று நடந்து முடிந்துள்ளது. 

முதல் இரண்டு பாகங்களில் ஹீரோவாக நடித்த அருள்நிதி இந்த பாகத்திலும் ஹீரோவாக நடிக்கும் நிலையில், இவருடன் நடிக்கும் மற்ற நடிகர் - நடிகைகள் பற்றிய தகவல் இன்னும் வெளியிடப்படவில்லை. இந்தப் படத்தை கோல்ட் மைன் பிலிம்ஸ் தயாரிக்க உள்ளதாகவும், கூடிய விரைவில் இப்படத்திற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என தெரிகிறது. மேலும் டிமான்ட்டி காலனியின் கடைசி பாகமாக இந்த திரைப்படம் உருவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

RK
About the Author

Rsiva kumar

நான் சிவக்குமார். கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் பிரிவில் முதுகலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 7 ஆண்டுகளாக இணைய ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறேன். சினிமா, கிரிக்கெட், ஜோதிடம், ஆன்மீகம் தொடர்பான செய்திகள் எழுதி வருகிறேன். தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழ் இணையதளத்தில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறேன்.சிவக்குமார் எம்பிஏ படித்து முடித்துள்ளார். இவருக்கு டிஜிட்டல் மீடியாவில் 8 வருட பணி அனுபவம் உள்ளது. இப்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, விளையாட்டு, ஜோதிடம், ஆன்மிகம் ஆகியவற்றில் ஆர்வம் உள்ளவர். அதுதொடர்பான சிறப்பு செய்திகளை எழுதி வருகிறார்.Read More...
Read more Articles on
click me!

Recommended Stories

மதகஜராஜா முதல் டூரிஸ்ட் ஃபேமிலி வரை... 2025-ல் சர்ப்ரைஸ் ஹிட் அடித்த டாப் 5 தமிழ் மூவீஸ்
ரீ-ரிலீஸுக்கு ரெடியான ரஜினிகாந்தின் பக்கா மாஸ் படம் ‘படையப்பா’... எப்போ வெளியாகிறது தெரியுமா?