அருள்நிதி நடித்துள்ள தேஜாவு ட்ரைலரை வெளியிட்ட உதயநிதி ஸ்டாலின்!!

By manimegalai a  |  First Published Jul 14, 2022, 10:37 PM IST

நடிகரும், உதயநிதி ஸ்டாலினின் நெருங்கிய உறவினருமான... அருள்நிதி நடித்துள்ள தேஜாவு படத்தின் ட்ரைலரை வெளியிட்டுள்ளார் உதயநிதி.
 


வைட் கார்ப்பட் ஃபிலிம்ஸ் சார்பில் K.விஜய் பாண்டி தயாரிப்பில், PG மீடியா ஒர்க்ஸ் சார்பில் PG முத்தையா இணை தயாரிப்பில் கதாநாயகனாக அருள்நிதி நடித்துள்ள திரைப்படம் 'தேஜாவு'. இப்படத்தினை அறிமுக இயக்குனரான அரவிந்த் ஸ்ரீநிவாசன் இயக்கியுள்ளார். இப்படத்தில் மதுபாலா, அச்சுத் குமார், ஸ்மிருதி வெங்கட், ராகவ் விஜய், சேத்தன், 'மைம்' கோபி, காளி வெங்கட் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

Tap to resize

Latest Videos

இன்று இப்படத்தின் டிரைலரை நடிகரும், தயாரிப்பாளரும், சட்டமன்ற உறுப்பினரான திரு.உதயநிதி ஸ்டாலின் அவர்கள் வெளியிட்டார். டிரைலரை கண்டு ரசித்து படக்குழுவினருக்கு தன் வாழ்த்துக்களையும் தெரிவித்தார். நிகழ்வின் போது தேஜாவு படத்தின் நாயகன் அருள்நிதி, தயாரிப்பாளர் விஜய் பாண்டி, இயக்குனர் அரவிந்த் ஶ்ரீநிவாசன், ரெட் ஜெயன்ட் மூவிஸ் இணை தயாரிப்பாளர் திரு M.செண்பகமூர்த்தி, ரெட் ஜெயன்ட் மூவிஸ் விநியோக திரு C.ராஜா ஆகியோர் உடனிருந்தனர்.

மேலும் செய்திகள்: இடுப்பை வளைத்து... நெளித்து... ஓவர் கவர்ச்சியில் ஆட்டம் போடும் கீர்த்தி சுரேஷ்..! ஷாக் ஆக்கிய ஹாட் போஸ்!
 

இப்படத்திற்கு ஜிப்ரான் இசையமைக்க, PG முத்தையா ஒளிப்பதிவை மேற்கொள்ள, படத்தொகுப்பாளராக அருள் E சித்தார்த், சண்டை பயிற்சியாளராக பிரதீப் தினேஷும் கலை இயக்குனராக வினோத் ரவீந்திரனும் பணியாற்றியுள்ளனர்.

மேலும் செய்திகள்: நயன்தாரா - விக்னேஷ் சிவன் திருமணத்தை ஒளிபரப்ப Netflix மறுத்தது ஏன்? வெளியான அதிரடி காரணம்!
 

வெளியான சில நிமிடங்களில் தேஜாவு ட்ரைலர் பலரின் கவனத்தை ஈர்த்து வருகிறது. இத்திரைப்படம் உலகம் முழுவதும் ஜுலை 22-ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

click me!